Kanguva Update: வெளியீடுக்கு தயாராகும் சூர்யாவின் கங்குவா திரைப்படம்; இறுதிக்கட்ட படத்தொகுப்பு பணிகள் தீவிரம்..! அசத்தல் கிளிக் இதோ.!
தமிழ் திரையுலகில் பிரம்மாண்ட எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் கங்குவா திரைப்படம், சூர்யாவின் திரையுலக வாழ்க்கையில் அடுத்த மைல்கல்லாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அயன் திரைப்படத்திற்கு பின்னர் 6 கதாபாத்திரத்தில் சூர்யா கங்குவா-வில் நடிக்கிறார்.
பிப்ரவரி 14, சென்னை (Cinema News): சிறுத்தை சிவா இயக்கத்தில், செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், ரூ.350 கோடி பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் திரைப்படம் கங்குவா (Kanguva). வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவில், நிஷாத் யூசுப் படத்தொகுப்பில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையில், ஆதி நாராயணா மற்றும் மதன் கார்க்கி வசனத்தில் கங்குவா திரைப்படம் உருவாகி இருக்கிறது.
2019 முதல் கங்குவா எதிர்பார்ப்பு: இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் சென்னை, கோவா, கொடைக்கானல், ராஜமுந்திரி உட்பட பல இடங்களில் நடைபெற்றது. 6 விதமான கதாபாத்திரத்தில் சூர்யா இப்படத்தில் தோன்றுகிறார். ஒவ்வொரு கதாபாத்திரமும் தசாவதாரம் திரைப்படம் போல, மக்கள் மனதில் பதிந்து நிற்கும் அளவு வடிவமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 2019ல் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகி, 2021ல் பிற பணிகள் தொடங்கி தற்போதுதான் வெளியீடுக்கு தயாராகி வருகிறது.
அயனுக்கு பின் அதிக தோற்றத்தில் நடிக்கும் படம்: இந்த ஆண்டில் எப்போது படம் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை எனினும், பிரம்மாண்டமாக ஐமேக்ஸ் தரத்திற்கு முப்பரிமாண தொழில்நுட்பத்தில் படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் அதிக பொருட்செலவு மற்றும் கடின உழைப்புடன் எடுக்கப்பட்ட படத்தில் இப்படமும் இடம்பெற்று இருக்கிறது. அயன் படத்தில் சூர்யா 13 விதமான கதாபாத்திரத்தில் உலாவந்தார். அந்த படத்திற்கு பின்னர் 6 தோற்றங்களில் அவர் நடிக்கவுள்ள திரைப்படம் கங்குவா என்பதும் குறிப்பிடத்தக்கது. Car Crash In Hospital: மருத்துவமனை வளாகத்தில் தறிகெட்டு இயங்கி விபத்திற்குள்ளான கார்; 10 பேர் படுகாயம்.!
3டி முறையில் 38 மொழிகளில் வெளியீடு: சர்வதேச அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் கங்குவா திரைப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலம் உட்பட 38 மொழிகளில் வெளியாகிறது. திரைப்படம் வெளியீடுக்கு முன்னதாகவே ரூ.500 கோடி மதிப்பிலான வருமானத்தையும் பெற்று இருக்கிறது. அமேசான் தளத்திலும் (Amazon Prime Video) படம் வெளியீடுக்கு பின்னர் ஒளிபரப்பப்படும்.
கங்குவா படக்குழு: திரைப்படத்தில் நடிகர்கள் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி, நடராஜன் சுப்ரமணியம், ஜெகபதி பாபு, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்தராஜ், ஜி.மாரிமுத்து, தீபா வெங்கட், ரவி ராகவேந்திரா, கே.எஸ்.ரவிக்குமார், பி.எஸ். அவினாஷ் உட்பட பலரும் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் சமீபத்தில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், தற்போது படத்தின் எடிட்டிங் உட்பட (Kanguva Post Production Work) பிற இறுதிக்கட்ட பணிகள் தொடங்கி இருக்கின்றன. அதுகுறித்த புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
(The above story first appeared on LatestLY on Feb 14, 2024 08:35 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

