Vijay Antony 25: விஜய் ஆண்டனியின் 25 வது படத்தின் தலைப்பு 'சக்தித் திருமகன்'.. அசத்தல் பர்ஸ்ட் லுக் உள்ளே.!

மிகக்குறுகிய காலத்தில் ஒருசில வெற்றித்திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக மாறியுள்ள விஜய் ஆண்டனியின் 25 வது படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. சினிமா செய்திகளை (Cinema News Tamil) தொடர்ந்து தெரிந்துகொள்ள லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தை பின்தொடரவும்.

Vijay Antony 25th Film Announcement (Photo Credit: @VijayAntony X)

ஜனவரி 29, கோடம்பாக்கம் (Cinema News): தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பலரின் மனதை கவர்ந்த விஜய் ஆண்டனி (Vijay Antony), நான் படத்தின் மூலமாக நாயகனாகவும் அறிமுகமாகினார். வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து, தனது நேர்த்தியான நடிப்பின் காரணமாக ரசிகர்களை கவர்ந்த விஜய் ஆண்டனி, இன்று முன்னணி தமிழ் நடிகர்களில் ஒருவராகவும் இருக்கிறார். இவரின் நடிப்பில் வெளியாகிய பிச்சைக்காரன், அண்ணாதுரை, திமிரு பிடிச்சவன், ரோமியோ உட்பட பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இசையமைப்பாளர், நடிகர் என இருந்தவர், பிச்சைக்காரன் 2 படத்தை இயக்கியும் வழங்கி இருந்தார். Yendi Vittu Pona Song: ஏண்டி விட்டு போன? காதல் தோல்வியடைந்தோர் ரெடியா? சிம்பு குரலில் உருகவைக்கும் பாடல்.! 

விஜய் ஆண்டனி 25 அறிவிப்பு (Vijay Antony 25 Announcement):

இந்நிலையில், நடிகர் விஜய் ஆண்டனியின் 25 வது (Vijay Antony 25th Film) திரைப்படம் தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, விஜய் ஆண்டனியின் 25 வது (VJ 25) திரைப்படத்திற்கு சக்தித் திருமகன் என பெயரிடப்பட்டுளள்து. விஜய் ஆண்டனியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் ஆண்டனி பிலிம்ஸ் கார்ப்பரேஷன் தயாரித்து வழங்கும் இப்படத்தை, அருண் பிரபு (Arun Prabu) இயக்குகிறார். விஜய் ஆண்டனி இசையமைக்கிறார். கோடைகாலத்தை முன்னிட்டு மே 2025 மாதத்தில் படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புயல் அடிக்கும் வேகத்தில் புழுதி குப்பை இருக்குமா? இவன் நாடாகும் வேகத்தில் சகுனிக்கூட்டம் தாங்குமா? என்ற கேள்வியுடன், கையில் ஆக்ரோஷமாக, விரக்தியுடன் துப்பாக்கியை வைத்து அமர்ந்து இருப்பதுபோன்ற புகைப்படமும் படக்குழு தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

சக்தித் திருமகன் படத்தின் முதல்பார்வை & அறிவிப்பு:

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement