Yash 19 Movie Update: நடிகர் யாஷின் 19வது திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: ஷாக்கிங் சர்ப்ரைஸால், கொண்டாடட்டத்தில் ரசிகர்கள்..!

இந்தியாவில் உள்ள பல மொழிவாரியாக திரையுலகில், கன்னடம் என்று கூறினாலே ராஜ்குமார் உட்பட பல சூப்பர்ஸ்டார்கள் இருப்பினும், ஒருசில விமர்சனங்கள் இருந்தது. அதனை அறவே அகற்றியது கே.ஜி.எப்.

Yash 19 Movie Update: நடிகர் யாஷின் 19வது திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு: ஷாக்கிங் சர்ப்ரைஸால், கொண்டாடட்டத்தில் ரசிகர்கள்..!
Yash 19th Movie Poster (Photo Credit: @TheNameIsYash X)

டிசம்பர் 04, பெங்களூர் (Bangalore): கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வந்த யாஷ் (Yash), காதல் - குடும்ப பின்னணி கதையம்ச திரைப்படங்களில் நடித்து இளம் ரசிகர்களிடையே பிரபலமானார்.

மோகன மனசு: இவரின் நடிப்பில் வெளியான மோகின மனசு என்ற கன்னட காதல் திரைப்படம் மொழிகளை கடந்து வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து, பல படங்களில் நடித்து வந்த யாஷ், இயக்குனர் பிரசாந்த் நீலுடன் கைகோர்த்து கே.ஜி.எஃப் படத்தில் நடித்திருந்தார்.

கன்னட திரையுலகம்: இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பு, கன்னட திரையுலகை ஒட்டுமொத்த உலகை நோக்கி பறைசாற்றியது. அதுவரை கன்னட படங்கள் மீது இருந்த பல்வேறு விமர்சங்களை தவிடுபிடியாக்கி வரவேற்பை பெற்றது. Nalgonda Bus Fire Accident: தனியார் சொகுசு பேருந்து தீ விபத்தில் சிக்கி கோர விபத்து: உடல் கருகி துள்ளத்துடிக்க பலியான பயணி.! 

கே.ஜி.எப் 3ம் பாகத்திற்கு காத்திருக்கும் ரசிகர்கள்: கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்து அசத்தியிருந்த யாஷ், சர்வதேச அளவில் முன்னணி நடிகரானார். இந்த இரண்டு திரைப்படங்களும் வசூல் மற்றும் வரவேற்பு ரீதியாக மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. கே.ஜி.எப் படத்தின் மூன்றாம் பாகம் விரைவில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

யாஷ் 19 திரைப்படம்: இந்நிலையில், கே.வி.என் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்துடன் கைகோர்த்துள்ள நடிகர் யாஷ், தனது 19 ஆவது படத்தில் நடித்து வருகிறார். இது தொடர்பான அறிவிப்பை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். படத்தின் தலைப்பு வரும் டிசம்பர் எட்டாம் தேதி காலை 09:55 மணியளவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

(The above story first appeared on LatestLY on Dec 04, 2023 12:27 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).