Nalgonda Accident (Photo Credit: @ienalgonda X)

டிசம்பர் 04, நல்கொண்டா (Nalgonda): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் நகரில் இருந்து, உள்ள சிரா நோக்கி நேற்று இரவு தனியார் சொகுசு பேருந்து ஒன்று 39 பயணிகளுடன் பயணம் செய்தது.

திடீர் தீ: இந்த பேருந்து நலகொண்டா மாவட்டம், மரிகுடா தேசிய நெடுஞ்சாலையில் வந்துள்ளது. அப்போது, பேருந்தில் திடீரென தீ பற்றி விபத்து ஏற்படவே, பேருந்து ஓட்டுனர் பேருந்து நடுரோட்டில் பேருந்தை நிறுத்தி இருக்கிறார். PM Modi on Election Results: "பாஜகவை மக்கள் விரும்புகிறார்கள்" - 3 மாநில தேர்தல் முடிவுகள் குறித்து மனம்திறந்த பிரதமர் நரேந்திர மோடி.! 

வெளியேறிய பயணிகள்: பயணிகளை அவசர கதியில் வெளியேற அறிவுறுத்தியதைத்தொடர்ந்து, பயணிகள் அனைவரும் பதறியபடி பேருந்தில் இருந்து வெளியேறினர். தீயும் மளமளவென பற்றதொடங்க, ஒருவர் மட்டும் உள்ளேயே சிக்கிக்கொண்டு பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தார்.

10 நிமிடங்கள்..: பேருந்து விபத்து ஏற்பட்ட இடத்திலிருந்து, பத்து நிமிடங்கள் பயணிக்கும் தொலைவில் தேநீர் நிறுத்தத்திற்காக நிறுத்துவதற்கு ஓட்டுனர் திட்டமிட்டுள்ளார். ஆனால், அதற்கு முன்னதாகவே விபத்து நடந்துள்ளது.

உயிரிழந்தவர் யார்?: தகவல் அறிந்த நலகொண்டா காவல்துறையினர் மற்றும் மீட்பு படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். பலியான ஒருவரின் உடலும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அவரது அடையாளத்தை காணும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.