Amy Jackson Engagement Party: நடிகை எமி ஜாக்சன் நிச்சயதார்த்த விழா..! - புகைப்படங்கள் வைரல்..!
சமீபத்தில் நடந்து முடிந்த நடிகை எமி ஜாக்சனின் நிச்சயதார்த்த இரவு விருந்து புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.
மார்ச் 23, சென்னை (Cinema News): நடிகை எமி ஜாக்சன் மதராசபட்டனம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர், தாண்டவம், ஐ, கெத்து, தெறி, எந்திரன் 2.0 ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது, அருண் விஜய் நடிப்பில் வெளியான 'மிஷன் சாப்டர் 1 -அச்சம் என்பது இல்லையே' என்ற படத்திலும் நடித்திருந்தார். Holi Festival Chemical Colors: ஹோலி பண்டிகையில் பயன்படுத்தும் ரசாயன பொடிகளில் உள்ள ஆபத்து..! – விவரம் இதோ..!
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த எமி ஜாக்சன், கடந்த 2019-ஆம் ஆண்டு தொழிலதிபர் ஜார்ஜ் என்பவருடன் திருமணம் நிச்சயமானது. ஆனால், திருமணம் ஆகாமல் ஆண் குழந்தை பிறந்தது. பின்னர், இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இவர்கள் உறவு முறிந்தது.
தற்போது, இவர் கடந்த சில மாதங்களாகவே பிரபல ஹாலிவுட் நடிகர் எட்வர்ட் பீட்டர் வெஸ்ட் விக் என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் ஒன்றாக சுற்றி திரியும் புகைப்படங்களையும் எமி ஜாக்சன் வெளியிட்டு வந்தார். சமீபத்தில் எமி ஜாக்சன் மற்றும் வெஸ்ட் விக்கின் நிச்சயதார்த்த இரவு விருந்து நடைபெற்றுள்ளது. இதனை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணம் உள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.
View this post on Instagram
(The above story first appeared on LatestLY on Mar 23, 2024 04:28 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

