மார்ச் 23, சென்னை (Health Tips): ஹோலி என்பது வண்ணங்களின் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைக்கு, வண்ணப்பொடிகள் தூவி, கலர் தண்ணீர் வைத்து அடித்தும் எல்லாரும் அவர்களது அன்பினை பரிமாறிக்கொள்வர். இதில், பயன்படுத்தப்படும் ரசாயன நிறங்கள் நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியதாக உள்ளது. அதைப்பற்றி முழுமையாக இந்த பதிவில் காண்போம். Forced Child Marriage: பள்ளி மாணவிக்கு கட்டாய தாலி; காதல் பெயரில் அத்துமீறி, குடும்பத்துக்கே கொலை மிரட்டல்.. 18 வயது இளைஞர் கைது..!
இது நமது உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக நமது உடலில் தோல், கண் மற்றும் சுவாசக்குழாய் ஆகியவற்றை முதலில் பாதிக்கிறது. பெரும்பாலும் நாம் வண்ணங்களை தெளிப்பதன் மூலம் அது நேரடியாகவே கண்களில் படுகிறது. இந்த ரசாயன நிறங்களில் உள்ள உலோகங்கள் நம் கண்ணின் கருவிழியில் பெரும் எரிச்சலை உண்டாக்கும். மேலும், இது கெராடிடிஸுக்கு வழிவகுக்கும்.
காண்டாக்ட் டெர்மடிடிஸ் போன்ற செயற்கை நிறங்களை பயன்படுத்தும் போது அலர்ஜி உள்ளவர்கள் எளிதில் ஒவ்வாமை பாதிப்புக்குள்ளாகின்றனர். சிவத்தல், அரிப்பு ஆகியன இதன் அறிகுறிகள் ஆகும். மேலும், ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி போன்ற சுவாசக்கோளாறுகள் உள்ளவர்களுக்கு இதனால் இருமல், சளி உற்பத்தி அதிகமாகும். கடுமையான சுவாச எரிச்சலைத் தூண்டும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: பண்டிகை கொண்டாடுவதற்கு முன் முகத்தில் கண்ணாடி பயன்படுத்திக் கொள்ளலாம். தேவையில்லாமல் கண்களை தொடாமல் இருப்பது நல்லது. குழந்தைகளுக்கு முழுவதுமாகவே இந்த நிறங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். தோல் மற்றும் கண்களில் ஏதேனும் காயம் அடைந்தால், உடனடியாக தெளிவான நீரைக் கொண்டு கழுவ வேண்டும். இதனை கண்டுகொள்ளாமல் இருந்தால், கடுமையான தோல் எரிச்சலை ஏற்படுத்திவிடும்.
முந்தைய காலங்களில் பூக்கள் மற்றும் மசாலாப் பொருட்களால் செய்யப்பட்ட இயற்கையான வண்ணங்களை கொண்டு ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால் தற்போது செயற்கையான ரசாயன நிறங்களை பயன்படுத்துவதால் உடலுக்கு அதிகமான தீங்கு விளைவிக்கிறது. எனவே. பாரம்பரிய முறையான இயற்கையான வண்ணங்களை கொண்டு பண்டிகையை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்திடுங்கள்.