Keerthi Suresh Love: மேடம் அடிபொலி.. காதலில் விழுந்த நடிகை கீர்த்தி சுரேஷ்?.. யார் அந்த அதிஷ்டசாலி தெரியுமா?..!

தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் கலக்கி வரும் நடிகை கீர்த்தி சுரேஷ், பள்ளிப்பருவ நண்பரான ரிசார்ட் உரிமையாளருடன் காதலில் விழுந்ததாக உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியுள்ளன.

Keerthi Suresh (Photo Credit: Instagram)

ஜனவரி 26: தமிழ் திரையுலகில் "இது என்ன மாயம்" (Idhu Enna Maayam) திரைப்படம் மூலமாக அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ் (Keerthi Suresh). இவர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் ரஜினிமுருகன் (Rajini Murugan), ரெமோ (Remo) உட்பட பல படங்களில் கதாநாயகியாக நடித்து தமிழ்நாட்டு இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டார். Pakistan Flag: திருட்டுத்தனமாக ஏற்றப்பட்ட பாகிஸ்தான் கொடி.. குடியிருப்பு பகுதியில் நடந்த சம்பவம்.. அதிகாரிகள் விசாரணை.! 

Keerthi Suresh with Saree (Photo Credit: Instagram)

மறைந்த பழம்பெரும் நடிகையான சாவித்ரியின் (Actress Savitri Ganesan) வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படத்தில் நடித்து தேசிய விருதை பெற்றார்.

Keerthi Suresh Vacation (Photo Credit: Instagram)

நடிகர் ரஜினிகாந்துடன் அண்ணாத்த (Annaatthe) திரைப்படத்தில் ரஜினிகாந்துக்கு (Rajinikanth) தங்கையாக நடித்திருந்தார். நடிகர் விக்ரமுடன் சாமி (Samy Squre) படத்தின் 2ம் பாகத்திலும் நடித்திருந்தார்.

Keerthi Suresh on Vacation (Photo Credit: Instagram)

கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்த கிரைம் தில்லர் படமான பென்குயின் (Penguin) திரைப்படத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

Keerthi Suresh

தனுஷுடன் நடித்த தொடரி (Thodari) படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. தமிழை போல தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளில் கீர்த்தி சுரேஷ் அதிகளவில் கவனம் செலுத்தியும் இருந்தார். Saidapet Gana Song Murder: நண்பரின் மரணத்தில் நடந்த கானாப்பாடல் நிகழ்ச்சியில் மோதல்.. இளைஞரை குத்தி கொன்ற 7 பேர் கும்பல் கைது.!

Keerthi Suresh Saree

இதற்கிடையில் கீர்த்தி சுரேஷ் இசையமைப்பாளர் அனிருத்தை (Anirudh) காதலித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில், கேரளா தொழில் அதிபருடன் (Kerala Businessman) அவருக்கு திருமணம் நடைபெறவிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், இதனை அவரின் குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்தனர்.

Keerthi Suresh Thinks

இந்தநிலையில், கீர்த்தி சுரேஷ் அவரின் பள்ளி கால நண்பரை காதலித்து வருவதாகவும், அவர் கேராவில் சொந்தமாகவே ரிசார்ட் வைத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

Keerthi Suresh Photo (Instagram)

இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளலாம் என்று கூறப்படும் நிலையில், அத்தகவல் கீர்த்தி சுரேஷ் தரப்பில் இருந்து உறுதி செய்யப்படவில்லை.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் ஜனவரி 26, 2023 08:52 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now