Nayanthara Wishes to Samantha: சமந்தாவுக்கு மனதார வாழ்த்துக்கள் தெரிவித்த நயன்தாரா: காரணம் இதுதான்.. குவியும் பாராட்டுக்கள்.!

14 ஆண்டுகளாக திரைத்துறையில் முன்னணி நடிகையாக ஜொலித்து வரும் நடிகை சமந்தாவுக்கு நயன்தாரா வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

Nayanthara Wishes to Samantha: சமந்தாவுக்கு மனதார வாழ்த்துக்கள் தெரிவித்த நயன்தாரா: காரணம் இதுதான்.. குவியும் பாராட்டுக்கள்.!
Nayanthara | Samantha (Photo Credit: Instagram)

பிப்ரவரி 26, சென்னை (Cinema News): தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாகவும், தெலுங்கு, ஹிந்தி மற்றும் பிற மொழிகளில் நடித்து வரவேற்பு பெற்ற நடிகையாகவும் இருப்பவர் சமந்தா (Samantha). மாடலிங், ஆடை வடிவமைப்பு என இருந்து வந்த சமந்தா, கடந்த 2010ம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனனின் தெலுங்குத் திரைப்படமான 'யே மாயா சேசவே' படத்தின் வாயிலாக திரைத்துறைக்கு அறிமுகமானார். இப்படம் தான் தமிழில் சிம்பு - திரிஷா நடிப்பில் விண்ணைத்தாண்டி வருவாயா என வெளியிடப்பட்டது. ஏ மாயா சேசவே படத்தில் இருந்தே சமந்தா - நாகசைதன்யா இடையே அறிமுகம் ஏற்பட்டது. India's poverty level has fallen below 5% இந்தியாவின் வறுமை 5% கீழ் குறைவு; மத்திய அரசு சரித்திர சாதனை.! 

விருதை பெற்றுத்தந்த காதல் படம்: பானா காத்தாடி, நீதானே என் பொன்வசந்தம், தீயா வேலை செய்யணும் குமாரு, அஞ்சான், கத்தி, தெறி, 24, மெர்சல், சீமராஜா, சூப்பர் டூலக்ஸ், காத்து வாக்குல இரண்டு காதல் உட்பட தமிழ் படங்களில் இவர் நடித்து இருக்கிறார். தற்போது வரை பல்வேறு படங்களில் நடித்துள்ள நடிகை சமந்தாவுக்கு நீதானே என் பொன்வசந்தம் திரைப்படம் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதை பெற்றுத்தந்தது. இதுதவிர நந்தி விருது, விஜய் டிவி விருது ஆகியவற்றையும் பெற்றுள்ளார். Thoothukudi Shocker: ஓய்வூதிய பணம் ரூ.40 இலட்சத்தை ஆடம்பரமாக செலவு செய்த கணவன் கொலை; பணத்திமிரில் கொடுமைப்படுத்தியதால் பயங்கரம்.! 

Nayanthara Wish Samantha (Photo Credit: Instagram)

நயன்தாரா வாழ்த்து: இந்நிலையில், நடிகை சமந்தா திரைத்துறைக்கு பரிட்சயமாகி இன்றோடு 14 ஆண்டுகள் நிறைவடைகின்றது. இதனை முன்னிட்டு அவரின் ரசிகர்கள் பலரும் தங்களின் அன்பான பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். நடிகை நயன்தாராவும் தனது பாராட்டுகளை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவிக்க, அதற்கு நடிகை சமந்தாவும் நன்றி தெரிவித்துள்ளார். எந்த விதமான பின்புலமும் இன்றி இன்று இந்திய அளவில் கவனிக்கப்படும் நடிகையாக சமந்தா இருக்கிறார் என்றால், அவரின் உழைப்பு அதற்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

(The above story first appeared on LatestLY on Feb 26, 2024 09:55 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).