Raashi Khanna: என்ன அழகு சார்.. பார்க்கப்பார்க்க ஜொலிக்கும் நட்சத்திரமாய் மின்னும் ராஷி கன்னா; வைரல் போட்டோ உள்ளே.!

படிப்பில் மிகவும் புத்திசாலித்தனமான மாணவியாக இருந்து வந்த ராஷி கண்ணா, தொடக்கத்தில் நடிகையாக விரும்பியது இல்லை. அவர் பாடகி, ஆட்சியர் என யோசனையில் இருந்து விதியால் நடிகையானார்.

Raashi Khanna: என்ன அழகு சார்.. பார்க்கப்பார்க்க ஜொலிக்கும் நட்சத்திரமாய் மின்னும் ராஷி கன்னா; வைரல் போட்டோ உள்ளே.!
Raashi Khanna (Photo Credit: Instagram)

செப்டம்பர் 03, மும்பை (Cinema News): கடந்த 2013ல் ஹிந்தி மொழியில் வெளியான Madras Cafe திரைப்படம் மூலமாக திரையுலகுக்கு அறிமுகமான நடிகை ராஷி கண்ணா (Raashi Khanna). ஹிந்தி மற்றும் தெலுங்கு திரையுலகில் நடித்து வந்த ராஷி கண்ணா, 2018ல் வெளியான இமைக்கா நொடிகள் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகுக்கும் அறிமுகமானார்.

படிப்பில் மிகவும் புத்திசாலித்தனமான மாணவியாக இருந்து வந்த ராஷி கண்ணா, நடிகையாக தொடக்கத்தில் விரும்பியது இல்லை. பாடகியாக விரும்பிய அவர், பின்னாட்களில் ஐ.ஏ.எஸ் தேர்வெழுதி ஆட்சியர் பொறுப்பேற்க வேண்டும் என விரும்பி இருக்கிறார். ஆனால், கல்லூரிகளில் படிக்கும் காலங்களில் விளம்பர படங்களுக்கு நகலெழுதி கொடுத்த ராஷி கண்ணா, பின்னாட்களில் விளம்பர படங்களில் நடித்து நடிகையானார். 40 Plus Women Health Tips: 40 வயதை கடக்கும் பெண்களா நீங்கள்?.. உங்களுக்குத்தான் அசத்தல் டிப்ஸ்.. விபரம் இதோ.!

மலையாளம், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்துக்கொண்டிருந்த நடிகை, தமிழில் இமைக்கா நொடிகள், அடங்காமாறு, அயோக்கியா, சங்கமித்திரன், துக்ளக் தர்பார், அரண்மனை 3, திருச்சிற்றம்பலம், சர்தார் ஆகிய படங்களில் நடித்துவிட்டார். அரண்மனை4 (Aranmanai 4), மேதாவி ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். இந்த படங்கள் விரைவில் வெளியாகவிருக்கின்றன.

எப்போதும் பிஸியான நடிகையாக இருந்து வரும் ராஷி கண்ணா, தெலுங்கு திரையுலகை அலங்கரித்த பல விருதுகளை அடுத்தடுத்து பெற்றுள்ளார். தற்போது இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள அழகிய புகைப்படம் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Raashii Khanna (@raashiikhanna)

(The above story first appeared on LatestLY on Sep 03, 2023 09:03 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).