Gang of Happy Women's (Photo Credit: Pixabay)

செப்டம்பர் 03, சென்னை (Health Tips): உடலுக்கு ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வளர்ந்த காலம் என்பது மலையேறி, பல புதிய உணவுகளின் அறிமுக மோகத்தால் பாரம்பரிய உணவுகளை மறந்து பல நோய்களை வழிய வாங்கி அவதிப்படும் இன்றைய தலைமுறை எதிர்கொள்ளும் பிரச்சனைகள் கொஞ்சநஞ்சமல்ல.

100 வயதை கடந்து வாழ்ந்த மனிதர்களின் பாரம்பரியத்தை கொண்ட இந்தியாவில், இன்று இளவயது குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை என பலரும் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு பலியாகின்றனர். இதில், வாகன விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் எண்ணிக்கை ஏராளம் என்றே கூறலாம்.

பெண்களும் தங்களின் சூழ்நிலை மற்றும் உடல்நலத்தை கவனிக்க தவறுதல் போன்ற பல காரணத்தால், 40 வயதை கடந்து பல்வேறு சிரமங்களை முந்தைய ஆண்டுகளில் இல்லாத அளவு பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றனர். X Hacked: குறைந்த விலையில் இன்டர்நெட் வழங்க, எலான் மஸ்கின் எக்ஸை முடக்கிய ஹேக்கர்கள்.. சூடானில் இருந்து பகீர் செயல்.!

40 வயதை கடக்கும் பெண்கள், தங்களின் உடல் மீது அக்கறை செலுத்த வேண்டியது அவசியம். உடலை உறுதியுடன் வைக்க உடற்பயிற்சி செய்ய வேண்டும். இந்த வயதில் நாம் ஏன் உடற்பயிற்சியெல்லாம் செய்ய வேண்டும் என இல்லாமல், நம்மைப்பார்த்து பலரும் வியக்கும் அளவு செயல்பட வேண்டும்.

வீடுகளில் இருக்கும் துடைத்தல், பாத்திரம் கழுவுதல், வீட்டு வேலைகளை செய்தல் போன்றவற்றில் ஈடுபட்டு உடல் உழைப்பை கொடுத்தாலே, அதுவும் உடற்பயிற்சிக்கு இணையானது தான். இதனைத்தாண்டி யோகா செய்யலாம். யோகா உடலுக்கு வலிமை, மனதுக்கு அமைதி ஆகியவற்றை கொடுக்கும்.

Happy Women (Photo Credit: Pixabay)

40 வயதுகளில் கணவன் - மனைவியிடையே ஏற்படும் உறவு சலிப்பை திறமையாக கையாண்டு சரிசெய்ய வேண்டும். குழந்தையை வளர்க்கிறேன், அன்பு காண்பிக்கிறேன் என்ற பெயரில் இருவரும் தங்களின் துணையுடன் காதலோடு இருந்த நாட்களை எப்போதும் மறக்க கூடாது. அவை தொடர வேண்டும். UK Shocker: 23 குழந்தைகள் பலாத்காரம், 123 குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை; இளம் காவலரின் அதிர்ச்சி செயல் அம்பலம்.!

குழந்தைப்பேறுக்கு பின் பல பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு என்பது குறையும், கால்சியம் குறைபாடு, வைட்டமின் குறைபாடு, உடல் மாற்றம் உண்டாகும். இவ்வாறான பல பிரச்சனைகள் காரணமாக உடல்நல கோளாறுகள் உண்டாகும்.

இதனால் இவ்வாறான தருணங்களில் உடலுக்கு சத்துக்களை கொடுக்கும் புரதம், கால்சியம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். பச்சை கீரைகள், காய்கறிகள், பயறு வகைகளை சாப்பிடலாம். நாம் சாப்பிடும் உணவுகள் உடல் எடையை அதிகரிக்காமல் இருக்க, பட்டியலிட்டு நேரத்திற்கு சரியான முறையில் சாப்பிட வேண்டும்.

உடல் எடை அதிகரிக்கும் பட்சத்தில் கால்வலி, முதுகு வலி போன்றவையும் உண்டாகும். முறையற்ற மாதவிடாய் சுழற்சியை நெருங்கும் மெனோபாஸ் காலமும் 40 வயதுக்கு மேல் சாத்தியமாவதால், பெண்களுக்கு மனதளவில் பாதிப்பு ஏற்படும். இதனால் குழந்தைகள், கணவருடன் நேரம் செலவிட்டு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.