HBD Rashmika: இளைஞர்களின் கனவுக்கன்னி, இளம் நாயகி ராஷ்மிகாவுக்கு இன்று பிறந்தநாள்.. நீங்களும் வாழ்த்து சொல்லுங்களேன்.!

திரைத்துறையில் 8 ஆண்டுகளாக தொடர்ந்து வெற்றி நாயகியாக இருந்து வரும் ராஷ்மிகா, இன்று பல இளைஞர்களின் மனம் கவர்ந்த நாயகியாக இருக்கிறார்.

HBD Rashmika: இளைஞர்களின் கனவுக்கன்னி, இளம் நாயகி ராஷ்மிகாவுக்கு இன்று பிறந்தநாள்.. நீங்களும் வாழ்த்து சொல்லுங்களேன்.!
Rashmika Mandanna (Photo Credit: Instagram)

ஏப்ரல் 05, சென்னை (Cinema News): தெலுங்கு, கன்னடா, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியான படங்களில் நடித்து, ரசிகர்களின் பேராதரவை பெற்ற நடிகை ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna). இளவயது நடிகையாக இருக்கும் இவர், கடந்த 2018 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான க்ரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தில் நடித்த புகழ் பெற்றார். இப்படம் வணிக ரீதியாக நல்ல வெற்றியை அடைந்ததை தொடர்ந்து சலோ, கீதா கோவிந்தம் (Geetha Govindam), தேவதாஸ் ஆகிய படங்களில் நடித்து அசத்தியிருந்தார். தமிழில் சுல்தான், வாரிசு படத்திலும் இவர் நடித்திருந்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகத்தில், கதாநாயகியாக மந்தனா நடித்திருந்தார். Court Dismiss Appeal for Ban Spa: ஸ்பா மையங்கள் செயல்பாட்டுக்கு தடை விதிக்க முடியாது; நீதிமன்றம் உத்தரவு.. காரணம் என்ன?..! 

Rashmika Mandanna (Photo Credit: Instagram)

குவியும் பிறந்தநாள் வாழ்த்து: புஷ்பா திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு & வெற்றியை பெற்றுத்தந்தது, அதனைத் தொடர்ந்து, அனிமல் படத்தில் ரன்வீர் கபூருடன் நடித்து அசதி இருந்தார். இப்படமும் நல்ல வெற்றியை அடைந்தது. நடப்பாண்டில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம், ரெயின்போ, தி கேர்ள் பிரண்ட், சாவா ஆகிய படங்கள் இவரது நடிப்பில் வெளியாகவுள்ளன. திரைக்கு வந்த 8 ஆண்டுகளில் நடிகை ராஷ்மிகா மந்தனா சைமா விருதுகள், பிலிம்பேர் விருதுகள் ஆகியவற்றை பெற்றுள்ளார். இன்று அவரின் பிறந்தநாள் சிறப்பிக்கப்படுகிறது. ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நீங்களும் உங்களின் வாழ்த்துக்களை கருத்தில் பதிவேற்றுங்கள்.

(The above story first appeared on LatestLY on Apr 05, 2024 11:01 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).