Massage (Photo Credit: Facebook)

ஏப்ரல் 05, டெல்லி (New Delhi): இந்தியாவின் தலைநகர் டெல்லியில் செயல்பட்டு வரும் ஸ்பாக்களில், பாலியல் ரீதியான மசாஜ் செய்வதை தடுக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநலமான தாக்கல் ஒன்று செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள் மன்மோகன், பி.எஸ் அரோரா ஆகியோர் குழு நேற்று பொதுநல மனுவை தள்ளுபடி செய்து அறிவித்தது.

ஸ்பா தடை செய்ய இயலாது: மேலும், வழக்கு விசாரணையில், "டெல்லி அரசாங்கம் கடந்த 2021 ஆகஸ்ட் 18ஆம் தேதி டெல்லியில் செயல்பட்டு வரும் ஸ்பாகள் மற்றும் மசாஜ் மையங்களை இயக்க வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. அதன் பெயரில் செயல்பட்டு வரும் ஸ்பாக்கலை தடை செய்ய இயலாது. மனுதாரர் தனது முறையிட்டில் வழிகாட்டுதல்களை மீறி கதவு தாழிடப்பட்ட அறைக்குள் மசாஜ் செய்யப்படும் போது விபச்சாரம் நடைபெறுவதாக கூறுகிறார். Bird Flu Kills 1000 Penguins: கொத்துக்கொத்தாக ஆயிரத்திற்கும் அதிகமான உயிர்கள் பலி.. உலகை அச்சுறுத்தும் எச்5என்1 பறவைக்காய்ச்சல்.! 

சோதனை நடத்த உத்தரவு: விபசாரம் போன்ற சட்டவிரோத செயல்கள் கண்டிக்கத்தக்கது. அதற்கு காவல்துறையினரின் சார்பில் சோதனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக யாரேனும் அவ்வாறான செயலில் ஈடுபட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேற்கூறிய மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" என கூறினர்.