Samantha Ruth Prabhu: நியூயார்க் நகரின் அழகை ரசிக்கும் சமந்தா - அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டு மகிழ்ச்சி.!
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருந்து வரும் சமந்தா, அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். இந்த தகவல் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவலால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 21, நியூயார்க் (Cinema News): இந்திய திரையுலகில் பல சோதனைகளை கடந்து சாதனை புரிந்த நாயகி சமந்தா. இவர் திரைத்துறையில் படிப்படியாக முன்னேறி, கவனிக்கத்தக்க நடிகைகளில் முக்கியமானவராக உயர்ந்தார். பின், தெலுங்கில் நட்சத்திர குடும்பமாக வாழ்ந்து வந்த நாகர்ஜூனாவின் மகன் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
கடந்த 2010ல் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் நடிக்க தொடங்கிய சமந்தா, தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். இவர் தமிழ் மொழியிலேயே அதிக படங்களை நடித்துள்ளார். பானா காத்தாடி, நான் ஈ, அஞ்சான், கத்தி, 10 எண்றதுக்குள்ள, 24, மெர்சல், இரும்புத்திரை உட்பட பல குறிப்பிடத்தக்க படங்களில் நடித்துள்ளார். Neem Tree Benefits: வேப்பமரத்தின் அட்டகாசமான நன்மைகள் என்னென்ன தெரியுமா?; அசத்தல் தகவலை தெரிஞ்சிக்கோங்க.!
நாகசைதன்யாவும் - சமந்தாவும் திரைப்படத்தில் ஏற்பட்ட காதலைத்தொடர்ந்து திருமணம் செய்து வாழ்ந்து வந்த நிலையில், பின் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒருமனதாக பிரிந்தனர். இருவரின் பிரிவும் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதன்பின்னர் யசோதா என்ற படத்தில் நடித்த சமந்தாவுக்கு அரியவகை நோயும் ஏற்பட்டது.
அதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்தவாறே திரைப்படத்திலும் நடித்து கொடுத்திருந்தார். இந்நிலையில், நடிகை சமந்தா தற்போது அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகருக்கு சென்றுள்ளார். அங்கிருந்து ரசிகர்களுக்காக புகைப்படம் ஒன்றையும் எடுத்து பதிவிட்டு இருக்கிறார்.
View this post on Instagram
(The above story first appeared on LatestLY on Aug 21, 2023 07:56 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

