Neem Flower | Neem Tree (Photo Credit: PIxabay)

ஆகஸ்ட் 20, சென்னை (Health Tips): மரங்கள் என்றாலே அவை பல நன்மைகளை தரக்கூடியவை. நிழலுக்கும், கார்பன் டை ஆக்ஸைடை ஆக்சிஜனாக மாற்றும் பெரும் சேவையையும் செவ்வனே செய்கின்றன. ஆனால், நாம் நமது தேவைக்காக அவற்றை அகற்றுகிறோம் என்றாலும், ஒரு மரத்தை அகற்றியதற்கு அருகேயே குறைந்தது 5 மரங்களையாவது நடவேண்டும் என்பதே எதிர்கால தலைமுறைக்கு நன்மையை சேர்க்கும்.

வெப்பமண்டல நாடுகளில் அதிகளவு காணப்படும் வேப்பமரம், தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் எங்கும் விளையும் இயற்கை சாராம்சம் கொண்ட மரம் ஆகும். வேப்பமரத்தில் மலைவேம்பு, நாட்டு வேம்பு வகைகளும் இருக்கின்றன.

வேப்பமரம் நமது ஊர்களில் செழித்து காணப்படும். சாலையோரம் இருந்த பல வேப்பமரங்கள் இன்றளவில் விரிவாக்கம் என்ற பெயரில் அகற்றப்பட்டு, பின் வேப்பமர கன்றுகளை சாலையோரம் நட்டுவைத்து பராமரிக்காமல் அப்படியே விடப்படுவதால், சாலையோர இயற்கை நிழற்குடையாக இருந்த மரங்களின் நிலை கேள்விக்குறியாகி வருகிறது. Rain Alert: அடுத்த 2 நாட்களுக்கு பல மாவட்டங்களில்.. இடி-மின்னலுடன் வெளுத்து வாங்கப்போகும் கனமழை; சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு இதோ.!

Neem Tree Flower (Photo Credit: Pixabay)

வேப்ப மரத்தின் அடியில் அமர்வது, காற்றை சுவாசிப்பது காரணமாக நமக்கு இயற்கையாகவே மன அமைதி என்பது கிடைக்கும். இது நோயெதிர்ப்பு சக்தியை பன்மடங்கு அதிகரிக்க உதவும். வயிறு சம்பந்தமான கோளாறுகளை சரி செய்யும். புற்றுநோய் ஏற்படாமல் பாதுகாக்கும். கிருமிகளை அழிக்கும்.

நமது வயிற்றில் கேடான பூச்சிகள் இருக்கும் பட்சத்தில், வேப்பம்பழம் சாப்பிட்டால் அவை சரியாகும். வேப்பிலையை எலுமிச்சை சாற்றோடு கலந்து அரைத்து தலைக்கு தேய்த்து குளிக்க, பித்த மயக்க சரியாகும். குமட்டல், வாந்தி, மலேரியா போண்றவற்றையும் சரி செய்யும் திறன் உள்ளது.

வேப்பிலை நோயெதிர்ப்பு செல்களை அதிகரிக்கும். இதன் கஷாயம் கிருமிகளை கொன்று காய்ச்சலை சரியாக்கும். தினமும் காலை 10 வேப்பங்கொழுந்துடன் 5 மிளகு சேர்த்து சாப்பிட மலேரியா காய்ச்சல் சரியாகும். வேப்பங்காய் சாப்பிட சர்க்கரை நோய் கட்டுப்படும். வேப்பங்குச்சியால் பற்களை துலக்க, பற்கள் வலிமை பெரும். ஈறுகள் பிரச்சனை சரியாகும். பித்த வெடிப்புக்கு வேப்பிலை ஆகச்சிறந்த மருந்து ஆகும்.

இதுபோன்ற பல நன்மைகளை கொண்டது வேப்பமரம். அதன் பட்டை, இலை நமக்கு பல நன்மைகளை தரவல்லவை. ஒவ்வொரு வீட்டிலும் வேப்பமரம் வளர்ப்பது நமக்கு நன்மை பயக்கும்.