Telugu Bigg Boss 7 Contestants: தெலுங்கு பிக் பாஸில் பங்கேற்கும் பிரபல நடிகை: யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்.!
தமிழில் பல்வேறு சின்னத்திரை நிகழ்ச்சிகளில் முழு வீச்சுடன் பங்கேற்ற நடிகை ஷகிலா தற்போது தெலுங்கு பிக் பாஸ் சீசன்- 7 இல் களமிறங்கி இருக்கிறார்.
செப்டம்பர் 4 , ஹைதராபாத் (Television News): வேடிக்கையும் விறுவிறுப்பும் நிறைந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தெலுங்கிலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியை தெலுங்கு திரையுலகின் பிரபல சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா தொகுத்து வழங்குகிறார். தெலுங்கு பிக் பாஸின் ஏழாவது சீசன் (Telugu Bigg Boss Season 7) நேற்று ஆரம்பமாகிய நிலையில் அதன் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தப்பட்டனர்.
இதில் ஆறாவது போட்டியாளராக நடிகை ஷகிலா அறிமுகமானார். தமிழ் சினிமாவின் கவர்ச்சி நடிகையாக பிரபலமான ஷகீலா தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். திருமணம் எதுவும் செய்து கொள்ளாத இவர், 50க்கும் மேற்பட்ட திருநங்கைகளின் வாழ்வாதாரத்திற்கு உதவி வருகிறார். Drumstick Flower Benefits: முருங்கை பூவுடன் இதனை சேர்த்து குடித்தால், அந்த பிரச்சனைக்கு சரியான தீர்வு.. அசத்தல் நன்மைகள் லிஸ்ட் இதோ..!
இவர் தனது நிஜ வாழ்க்கையின் சுவாரஸ்யமான அனுபவங்களை யூட்யூப் சேனல்களுக்கு பேட்டி அளித்திருக்கிறார். விஜய் டிவியின் ‘குக் வித் கோமாளி’ (Cook With Comali) நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு தனது சமைக்கும் திறமையை வெளிப்படுத்தினார்.
நடிகை ஷகிலா ஏற்கனவே கன்னட மொழியின் பிக் பாஸ் சீசன் 2 வில் போட்டியாளராக பங்கேற்று, குறுகிய காலத்திலேயே வெளியேற்றப்பட்டார். நேற்று இவரது இரண்டு திருநங்கை மகள்களும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்து இவரை வீட்டிற்குள் வழி அனுப்பி வைத்தனர். இவரது வருகையால் தெலுங்கு பிக் பாஸ் சீசன்-7 நிகழ்ச்சி இன்னும் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
(The above story first appeared on LatestLY on Sep 04, 2023 07:35 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

