
செப்டம்பர் 04, சென்னை (Health Tips): இந்தியாவில் பயிரிடப்பட்டு வளர்க்கப்படும் மரங்களில் முருங்கை (Drumstick) முக்கியமானது. காற்றடித்தால் முறிந்து விழும், அதிக பாரம் தாங்காத முருங்கை மரத்தில் உருவாகும் காய், பூ (Drumstick Flower), கீரையில் உடலுக்கு பல நன்மைகளை தரும் விஷயங்கள் நிறைந்து கிடக்கின்றன. மருத்துவ குணம் கொண்ட முருங்கையை, மருத்துவர்கள் எப்போதும் முதன்மையாக பலருக்கும் பரிந்துரை செய்வார்கள்.
முருங்கைக்காய், முருங்கை கீரை போல முருங்கை பூவிலும் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன. வீடுகளில் முருங்கை மரத்தினை வைத்திருப்பவர்கள், பெரும்பாலும் முருங்கை பூவினை ஏறெடுத்தும் கூட பார்ப்பது இல்லை. காரணம் அதில் புழுக்கள் இருக்கலாம் அல்லது எறும்புகள் இருக்கும் என்பதே அவர்களின் காரணமாக இருக்கிறது. BlueSattai Maran: விஜயை பார்த்து நடுநடுங்கும் தமிழ் திரையுலகம்?.. புளூ சட்டை மாறனின் திடீர் தகவலால், உற்சாகத்தில் தளபதி ரசிகர்கள்..!
அதனால் ஏற்படும் நன்மைகளை பலரும் அறிந்துகொண்டால், இவ்வாறான சில்லறை காரணங்களை இனி தவிரித்துவிட்டு விரும்பி உண்ணலாம். முருங்கை மரம் வைத்திருப்பவர்கள், முருங்கை பூவினை கீரையுடன் சேர்த்து பொரித்து சாப்பிடலாம் அல்லது முருங்கை பூவினை தனியே எடுத்து பொரித்து முட்டையுடன் சேர்த்து வதக்கி சாப்பிடலாம். இன்று முருங்கை பூவின் நன்மைகள் குறித்து காணலாம்.

ஆண்மை: முருங்கைப்பூ ஆண்மையை அதிகரிக்கும் தாது கொண்டது ஆகும். இதனை பாலில் சேர்த்து நன்கு காய்ச்சி தினமும் குடித்துவர, ஆண்மைக்கான தாது பலமாகும். முருங்கை பூவினை அரைத்து பாலில் பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்கவைத்து 48 நாட்கள் குடித்து வந்தால், தாம்பத்திய விஷயத்தில் நாட்டம் ஏற்படும். அதனாலேயே முருங்கை பூ இயற்கை வயகரா என அழைக்கப்படுகிறது.
மாதவிடாய் உதிரப்போக்கு: முருங்கைப்பூவின் பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர, ஒரு மணடலத்தில் ஆண்மை அதிகரிக்கும். முருங்கை பூவினை அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்வது நீரிழிவு நோயினால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும். உடல் சூட்டை தணிக்க உதவும். பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் ஏற்படும் உதிரப்போக்கை முருங்கை பூவின் கஷாயம் தணிக்கும். Trending Video: தாத்தாவுடன் சோபாவில் படுத்து லூட்டி செய்யும் பூனை; கலக்கல் வீடியோ உள்ளே.!

மறதி சரியாகும்: அதேபோல, மேகநோய் தடுக்கப்படும். முருங்கை பூவினை துவையல் போலவும் நமது விருப்பத்திற்கேற்ப செய்து சாப்பிடலாம். மறதியை நீக்கி, நினைவாற்றலை அதிகரிக்க முருங்கைப்பூ உதவும். நா சுவையின்மை பிரச்சனையை சரி செய்யும். கண்கள் குளிர்ச்சியாக முருங்கை பூவினை பாலில் வேகவைத்து, அந்த பாலை குடிக்க வேண்டும்.
கணினி வேலையில் இருப்போருக்கு வரப்பிரசாதம்: இதனால் பித்த நீர் பிரச்சனை, வாதம், கபம் போன்றவையும் சரியாகும். எப்போதும் கணினி ரீதியிலான வேலை பார்ப்பவர்கள், அலுவலக பணியாளர்களுக்கு 40 வயதுக்கு மேல் கண்ணாடி இல்லாமல் வேலை பார்க்க இயலாது, நாளிதழ் படிக்க நினைத்தாலும் வெள்ளெழுத்து பிரச்சனை, பார்வை குறைபாடு போன்றவற்றை எதிர்கொள்ள நேரிடும். இவ்வாறானவர்கள் முருங்கை பூவினை நிழலில் உலர்த்தி காயவைத்து, பொடியாக அரைத்து எடுத்து தேன் கலந்து சாப்பிட வேண்டும். இதனால் பார்வைத்திறன் அதிகரிக்கும், வெண்படலம் மாறுபடும். கண்களுக்கு குளிர்ச்சி கிடைக்கும்.
மனஅழுத்தத்திற்கு தீர்வு: பசும்பாலுடன் முருங்கை பூவினை சேர்த்து காய்ச்சி காலை மற்றும் மாலை வேளைகளில் குடித்துவர, கண்களில் ஈரப்பதம் ஏற்பட்டு பார்வை கோளாறு நீங்கும். வேலைப்பளு, மனரீதியான அழுத்தம் காரணமாக நரம்புத்தளர்ச்சி பிரச்சனைக்கு ஆளாகும் நபர்கள், முருங்கைப்பூவை கஷாயமாக செய்து சாப்பிடலாம்.