Shriya Saran: தாயான பின்பு ஸ்ரேயா சரண் வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ்; எப்படி சூப்பராக இருக்காங்க பாருங்களேன்.!

தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து இந்திய அளவில் பெரிதும் கவனிக்கப்பட நடிகைளில் முக்கியமானவர் ஸ்ரேயா சரண். தனது நடனம் மற்றும் நடிப்பு திறமையால் இன்று வரை அவர் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் நடிகையாகவும் இருக்கிறார். அவருக்கு 40 வயதும் ஆகிவிட்டது.

Actress Shriya Saran (Photo Credit: Instagram)

ஏப்ரல் 11 , (Cinema News): தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் ஷ்ரேயா சரண் (Shriya Saran). கடந்த 2001ம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளியான இஷ்டம் படத்தின் மூலமாக தொடங்கிய அவரின் திரைவாழ்க்கை, இன்று அபரீதமாக உயர்ந்து இருக்கிறது. அவரின் விடா முயற்சி அவருக்கான வெற்றிகளை கொண்டு வந்து சேர்த்தது.

அதனைத்தொடர்ந்து, ஹிந்தி, தெலுங்கு, தமிழ் என பல படங்களில் நடித்த ஸ்ரேயாவுக்கு 2007ம் ஆண்டு வெளியான சிவாஜி திரைப்படம் பல புகழ்களை கொண்டு வந்தது. நடிகர் ரஜினிகாந்துடன், சங்கரின் இயக்கத்தில் வெளியான சிவாஜி படத்திற்கு பின்னர் அவர் உலகளவிலும் கவனிக்கப்பட்டார். RSS Rally Tamilnadu: ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கியது உச்சநீதிமன்றம்; தமிழ்நாடு அரசின் மனு அதிரடி தள்ளுபடி.!

அதன்பின் கந்தசாமி, போக்கிரி ராஜா, ரௌத்திரம் ஆகிய படங்களிலும் அவர் நடித்துள்ளார். தமிழில் சிவாஜி படத்தில் நடித்ததற்கு சவுத் ஸ்கோப் ஸ்டைல் ​​விருதையும் வென்றார். அதேபோல, பிலிம்பேர், இட்பா, தென்னிந்திய பிலிம்பேர், சைமா உட்பட பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

நடிகையாகவும், நடனத்தில் வல்லவராகவும் இருக்கும் ஸ்ரேயா சரண், கடந்த 2018ம் ஆண்டு ஆண்ட்ரி கோசீவ் என்பவரை திருமணம் செய்துகொண்டவருக்கு ஒரு குழந்தை இருக்கிறது. தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் கர்ப்பமாக இருந்த புகைப்படத்தையும், அதற்கு முன்பு இருந்த புகைப்படத்தையும் ஸ்ரேயா பதிவிட்டு இருக்கிறார். அது வைரலாகியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Shriya Saran (@shriya_saran1109)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement