Sobhita Dhulipala & Naga Chaitanya: கோவா திரைப்பட விழாவில் நாகர்ஜுனா குடும்பத்துடன் நடிகை சோபிதா.. விரைவில் திருமணம்?..
இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி வரும் நடிகர் நாக சைதன்யா, தனது வருங்கால மனைவியுடன் கோவா திரைப்பட விழாவில் தோன்றி இருக்கிறார்.
நவம்பர் 21, பானாஜி (Cinema News): 55 வது சர்வதேச திரைப்படத் திருவிழா 2024 கோவா மாநிலத்தில் உள்ள பானாஜி நகரில் வைத்து நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட 151 திரைப்படங்கள் சர்வதேச பார்வையாளர்கள் முன் திரையிடப்பட்டு, சிறந்த படம், இயக்குனர், நடிகர் உட்பட பல்வேறு பிரிவுகளில் பரிசுகள் வழங்கப்படும். 81 நாடுகளை சேர்ந்த திரைப்பட குழுவினர் கோவாவில் முகாமிட்டு இருக்கின்றனர். இவர்களுக்கான பாதுகாப்பு உட்பட பல்வேறு ஏற்பாடுகளை கோவா மாநில அரசு மேற்கொண்டு இருக்கிறது. இந்திய அளவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த திரைப் பிரபலங்களும் இவ்விழாவில் கலந்துகொள்கின்றனர். Keerthy Suresh Wedding: 15 வருட காதலுடன் திருமணம்.. கீர்த்தி சுரேஷுக்கு அடுத்த மாதம் கோவாவில் திருமணம்..!
எதிர்கால கணவர், மாமனார் குடும்பத்துடன் சோபிதா:
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வரும் நாகர்ஜூனாவின் மகன் நாக சைதன்யா (Naga Chaitanya), கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சமந்தாவை காதலித்து திருமணம் செய்து பின் பிரிந்துவிட்டனர். இருவரும் பிரிந்து ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இருவரும் தங்களின் பாதைகளில் பயணத்தை தொடங்கியுள்ளனர். இதனிடையே, நாக சைதன்யா நடிகை சோபிதா துடிபேலாவை (Sobhita Dhulipala) திருமணம் செய்யவிருப்பதாக முதலில் கிசுகிசுக்கப்பட்டு, பின் அவர்களின் திருமணம் உறுதி செய்யப்பட்டது. இருவரும் வரும் டிசம்பர் மாதம் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, நடிகை சோபிதா, தனது எதிர்கால கணவர் மற்றும் மாமனார் குடும்பத்துடன் கோவா திரைப்பட விழாவில் கலந்துகொண்டுள்ளார்.
கோவா திரைப்பட விழாவில் நாகர்ஜுனா குடும்பத்துடன் நடிகை சோபிதா:
View this post on Instagram
(The above story first appeared on LatestLY on Nov 21, 2024 04:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

