Keerthy Suresh | Antony Thattil (Photo Credit: Facebook)

நவம்பர் 21, மும்பை (Cinema News): தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் (Keerthy Suresh), தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வருகிறார். ‘தெறி’ ரீமேக்கான ‘பேபி ஜான்’ படம் மூலம் இந்தியில் அறிமுகமாக இருக்கிறார். இவருக்கு திருமணம் நடைபெற போவதாக ஏற்கனவே சில முறை தகவல்கள் வெளிவந்தன. இருப்பினும் அதனை அவர் உறுதிப்படுத்தவில்லை. Aishwarya Rajinikanth And Dhanush Divorce: தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு.. இன்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜர்..!

இந்த நிலையில் டிசம்பர் 11 மற்றும் 12ஆம் தேதி கோவாவில் கீர்த்தி சுரேஷின் திருமணம் நடைபெறும் என்று இணையத்தில் தகவல்கள் பரவியது. நடிகை கீர்த்தி சுரேஷும், ஆண்டனியும் (Antony Thattil) கடந்த 15 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஒரே பள்ளியில் படித்த இருவரும் நண்பர்களாக இருந்து காதலர்களாக மாறியுள்ளனர். இந்நிலையில், இருவீட்டார் சம்மதத்துடன் கோவாவில் திருமணம் நடைபெற உள்ளதாக கீர்த்தி சுரேஷ் அப்பா சுரேஷ்குமார் கூறியுள்ளார். ஆண்டனி தட்டில் கேரளாவில் உள்ள ரெசார்ட் ஒன்றின் உரிமையாளர் என்றும், துபாயில் தொழிலதிபராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.