Urfi Fake Arrest Video: ட்ரெண்டிங் நடிகைக்கு கிடைத்த இன்ஸ்டன்ட் ஆப்பு; போலி கைது வீடியோ வெளியிட்டு சர்ச்சை; முற்றுப்புள்ளிவைத்த மும்பை காவல்துறை.!
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் பிரபலமாக இருக்கும் நடிகை மேற்கொண்ட புதிய முயற்சி, அவரின் மீது பல வழக்குகளை வாங்கிக்குவிக்க காரணமாக அமைந்துள்ளது.
நவம்பர் 04, மும்பை (Cinema News): ஹிந்தியில் ஒளிபரப்பாகிய Bade Bhaiyya Ki Dulhania, Chandra Nandini, Meri Durga உட்பட பல நெடுந்தொடர்களில் நடித்து பிரபலமான நடிகை உர்பி ஜாவேத் (Urfi Javed). தொலைக்காட்சித்தொடர் மற்றும் வெப்செரிஸ் போன்றவற்றில் மட்டுமே நடித்திருந்தாலும், இவர் இந்திய அளவில் பிரபலமான கவர்ச்சி நடிகை ஆவார்.
ஒவ்வொருவரிடமும் பாலின சமத்துவத்தை வளர்க்க வேண்டும் என்று கூறி, தனது உடல் அங்கத்தை அளவாக மறைக்கும் குட்டியான ஆடை, அல்லது மேலாடையின்றி போட்டோ சூட் நடத்தி வெளியிட்டு பிரபலமடைந்த நடிகைகளில் இவர் கவனிக்கத்தக்கவர். இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 4.2 மில்லியன் மக்கள் பின்தொடருகின்றனர். Nepal Earthquake Death toll: நேபாளம் நாட்டில் அதிபயங்கர நிலநடுக்கம்; கிடுகிடுவென உயரும் பலி எண்ணிக்கை.!
இந்நிலையில், போலியாக காவல் அதிகாரிகளால் கைது செய்யப்படுவது போன்ற வீடியோவை வெளியிட்ட நடிகை உர்பி ஜாவத்தின் மீது, ஓசிவரா காவல்துறையினர் இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 171, 419, 500 மற்றும் 34 ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட வைரலான வீடியோவுக்கு மறுப்பு தெரிவித்துள்ள மும்பை மாநில காவல்துறையினர், ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட நடிகை மட்டுமல்லாது, அதை படம் பிடித்த, நடித்த நபர்களையும் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
(The above story first appeared on LatestLY on Nov 04, 2023 02:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

