நவம்பர் 04, நேபாளம் (World News): கடந்த பிப்ரவரி மாதம் துருக்கி-சிரியா எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் காரணமாக 50,000-க்கும் அதிகமான பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலநடுக்கத்தை முன்பே கணித்த நிலவியல் ஆய்வாளர், அடுத்தகட்டமாக பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான்-இந்தியா ஆகிய நாடுகளை மையமாகக் கொண்டு பயங்கர நிலநடுக்கம் ஏற்படும் என ஏற்கனவே எச்சரித்து இருந்தார்.
அதனை உறுதி செய்யும் பொருட்டு ஆப்கானிஸ்தானில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட நிலடுக்கம், 2,000-க்கும் அதிகமான உயிர்களை பறித்தது. மேலும், பொருட்சேதத்தையும் ஏற்படுத்தியது.
இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் நேபாள நாட்டில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.3 என்ற அளவில் பதிவான நிலக்கத்தின் காரணமாக, அங்குள்ள மேற்கு மாவட்டங்களான ஜாஜர்கோட் (Jajarkot), ருக்கும் (Rukum) கடுமையான சேதத்தை சந்தித்துள்ளது.
உள்ளூர் நேரப்படி நள்ளிரவு 11:47 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம், இந்தியாவின் டெல்லி போன்ற மாநிலங்களிலும் உணரப்பட்டிருக்கிறது. இந்த நிலநடுக்கம் காரணமாக தற்போது வரை 140 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும், 250 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.