Kiran Rathod (Photo Credit: @Instagram)

மே 24, மும்பை (Cinema News Tamil): தமிழ் திரையுலகில் கடந்த 2002ம் ஆண்டில் வெளியான ஜெமினி திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர் கிரண் ரத்தோட் (Kiran Rathod). அப்படத்தில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து வில்லன், அன்பே சிவம், வின்னர், திமிரு, சகுனி, ஆம்பள, முத்தின கத்தரிக்காய் உட்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். இவரின் கவர்ச்சி காட்சிக்கே ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். Hindu-Muslim Wedding: ஒரே மேடையில் அரங்கேறிய இந்து, முஸ்லீம் திருமணம்.. நெகிழ்ச்சி சம்பவம்..! 

நடிகை கிரண் ரத்தோட் லீக் (Actress Kiran Rathod Leaked Video):

இந்நிலையில், நடிகை கிரண் ரத்தோடின் ஏஐ தொழில்நுட்பத்துடன் எடிட் செய்யப்பட்ட ஆபாச வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை எடிட் செய்த மர்ம நபர்களுக்கு உச்சகட்ட எச்சரிக்கை விடுத்துள்ள நடிகை, வீடியோவை பகிர வேண்டாம் எனவும் கோரிக்கை வைத்துள்ளார். இதுபோன்ற ஏஐ தொழில்நுட்பத்துடன் எடிட் செய்யப்பட்ட வீடியோ சமீபத்தில் அதிகம் பரவி நடிகைகளுக்கு அவப்பெயரை ஏற்படுத்த முற்படுவது குறிப்பிடத்தக்கது.