
மே 23, புனே (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலம், புனே (Pune) வான்வோரி பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில், முஸ்லீம் குடும்பத்தினரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. புதுமண தம்பதியரான மகீன்-மோக்சின் காஷி ஆகியோர் மணமேடையில் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில், மண்டபத்தின் அருகே உள்ள திறந்தவெளியில், சமஸ்கிருதி கவாடே பாட்டீல் - நரேந்திர கலாண்டே பாட்டீல் ஆகிய இந்து தம்பதியின் திருமண நிகழ்வு நடைபெற்றது. இளம்பெண் கழுத்து நெரித்துக் கொலை.. காதலன் உட்பட மூவர் கைது..!
இந்து - முஸ்லீம் திருமண நிகழ்வு:
அப்போது, மாலை 6.56 மணிக்கு திடீரென மழை பெய்யத் தொடங்கியது. திறந்தவெளி என்பதால் அங்கு ஒதுங்க கூட இடம் இல்லாமல் தவித்தனர். அப்போது, அருகில் உள்ள திருமண மண்டபத்திற்கு, திருமண தம்பதி மற்றும் அவர்களது குடும்பத்தினர் சென்றனர். ஆனால், அங்கு ஏற்கனவே முஸ்லிம் குடும்பத்தின் திருமண நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், இந்து குடும்பத்தினர் முஸ்லீம் குடும்பத்தினரிடம் திருமணத்தை அங்கு நடத்த அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெகிழ்ச்சி சம்பவம்:
இதனையடுத்து, இந்து தம்பதி மற்றும் முஸ்லீம் தம்பதியின் திருமணம் ஒரே மணமேடையில் நடைபெற்றது. இரு சமூகங்களை சேர்ந்த மணமக்களும் கூட்டாக மணமேடையை பகிர்ந்து கொண்டதுடன், தங்களை வாழ்த்த வந்த உறவினர்களுடன் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர். மேலும், தொடர்ந்து நடைபெற்ற திருமண விருந்திலும் ஒன்றாக கலந்துகொண்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.