OMG 2 Har Har Mahadev Song: நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த OMG 2 படத்தின் ஹர் ஹர் மகாதேவ் பாடல் வெளியானது., லிங்க் உள்ளே.!
அக்ஷய் குமாரின் OMG 2 திரைப்படத்தில் 20 இடத்தில் காட்சி வெட்டு உட்பட மியூட் போன்ற நடவடிக்கைக்கு உத்தரவிட்ட தணிக்கை குழு UA சான்றிதழ் வழங்கியுள்ளது.
ஜூலை 27, மும்பை (Cinema News): ஹிந்தியில் நகைச்சுவை - நாடக பாணியில் உருவாகியுள்ள திரைப்படம் OMG 2. ரூ.150 கோடி செலவில், அமித் ராய் இயக்கத்தில், கேப் ஆஃப் குட் பிலிம்ஸ், Viacom18 ஸ்டுடியோஸ், வக்காவோ பிலிம்ஸ் நிறுவனங்களின் தயாரிப்பில் படம் வெளியாகிறது.
படத்தில் ஹிந்தி திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான அக்ஷய் குமார் கதாநாயகனாக நடிக்கிறார். பங்கஜ் திரிபாதி, யமி, கோவிந்த் நமதேவ், அருண் உட்பட பலரும் நடித்துள்ளனர்.
படத்தின் இசையமைப்பு பணிகளை விக்ரம் மாண்ட்ரோஸ் மேற்கொண்டுள்ளார். இப்படத்தின் டிரைலர், டீசர், முதல் பாடல் ஆகியவை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. Minor Girl Raped: 5 வயது சிறுமியை கரும்புத்தோட்டத்தில் பலாத்காரம் செய்த பயங்கரம்; மழலையின் மொழியில் வெளியான பகீர் உண்மை.!
OMG 2 திரைப்படம் 11 ஆகஸ்ட் 2023 அன்று வெளியாகவுள்ள நிலையில், படத்தின் Har Har Mahadev பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அக்ஷய் குமார் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இப்படத்திற்கு UA சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
படத்தில் சுமார் 20 இடங்களில் காட்சி வெட்டு அல்லது மியூட் போன்ற நடவடிக்கைகளுக்கு சென்சார் குழு பரிந்துரைத்து, அவை மீண்டும் சரிபார்க்கப்பட்டு UA சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
(The above story first appeared on LatestLY on Jul 27, 2023 12:21 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

