Minor Girl Raped: 5 வயது சிறுமியை கரும்புத்தோட்டத்தில் பலாத்காரம் செய்த பயங்கரம்; மழலையின் மொழியில் வெளியான பகீர் உண்மை.!
ரிங்கு வர்மாவின் மகனும், 5 வயதுடைய சிறுமியும் நண்பர்கள் என்பதால், சிறார்கள் இருவரும் அவ்வப்போது விளையாடி மகிழ்ந்து வந்துள்ளனர். அப்போது சிறுமியை கண்ட ரிங்குவின் எண்ணம் கேடானதால், சிறுமிக்கு துயரம் நடந்துள்ளது.
ஜூலை 27, பாரபங்கி (UttarPradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பாரபங்கி (Barabanki) பகுதியை சேர்ந்த விவசாயி ரிங்கு வர்மா. இவருக்கு திருமணம் முடிந்து 5 வயதுடைய மகன் இருக்கிறார். இதே பகுதியை சேர்ந்த தம்பதிக்கு 5 வயதுடைய மகள் இருக்கிறார்.
ரிங்கு வர்மாவின் மகனும், 5 வயதுடைய சிறுமியும் நண்பர்கள் என்பதால், சிறார்கள் இருவரும் அவ்வப்போது விளையாடி மகிழ்ந்து வந்துள்ளனர். சம்பவத்தன்று ரிங்குவின் மகனுடன் சிறுமி விளையாடிக்கொண்டு இருந்துள்ளார்.
அப்போது, சிறுமியை தனது கரும்பு தோட்டத்திற்குள் தூக்கிச்சென்ற கயவன், அங்கு சிறுமியை பலாத்காரம் செய்து இருக்கிறான். கயவனின் கொடூரத்தால் சிறுமி மயங்கிவிட, அவர் இறந்துவிட்டதாக எண்ணி உடலை அங்கேயே விட்டு வந்துள்ளான். Cuddalore: ஒரேநாளில் 17 பேருந்துகளின் கண்ணாடிகள் உடைப்பு; விளையும் பயிரை அழித்த என்.எல்.சி நிறுவனத்தால் விவசாயிகள் போர்க்கொடி.!
ஒன்றும் புரியாத ரிங்குவின் மகன் தனது தோழியை கேட்டு தந்தையிடம் வாதம் செய்ய, அவர் வரமாட்டார் என கூறி மகனை சத்தமிட்டு இருக்கிறார். மகளை காணாது தேடி வந்த பெற்றோரிடம், அவர் காணவில்லை என ரிங்கு கூறி இருக்கிறான்.
இதனைக்கேட்டு பதறிப்போன பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, விரைந்து வந்த அதிகாரிகள் சிறுவனுடன் சிறுமி இறுதியாக விளையாடிக்கொண்டு இருந்தார் என்ற தகவலை உறுதி செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது, சிறுவன் அதிகாரிகளிடம், "Papa usko saath lekar jaa rahe the (My father was taking her along)" எனது தந்தை சிறுமியை தூக்கி சென்றார் என கூறியுள்ளார். இதனையடுத்து, ரிங்குவிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது உண்மை அம்பலமாகியுள்ளது. Chicken Podimas: சிக்கனில் சுவையான பொடிமாஸ் செய்வது எப்படி?; இல்லத்தரசிகளே தெரிஞ்சிக்கோங்க.!
கரும்பு தோட்டத்திற்குள் விரைந்து சென்ற அதிகாரிகள், சிறுமி மயக்க நிலையில் இருப்பதை உறுதி செய்துள்ளனர். இதனையடுத்து, சிறுமி மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சம்பவம் குறித்து வழக்குப்பதிந்த அதிகாரிகள் ரிங்கு வர்மாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறுமி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
(The above story first appeared on LatestLY on Jul 27, 2023 11:00 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

