Emily Willis Went Coma: உயிருக்கு போராடும் பிரபல ஆபாச பட நடிகை; 700 படங்களில் நடித்து படுத்த படுக்கையாக சோகம்.!

4 ஆண்டுகளுக்குள் 700 க்கும் அதிகமான ஆபாச படங்களில் நடித்த நடிகை, தற்போது மரணப்படுக்கையில் உயிருக்கு போராடும் சோகம் நடந்துள்ளது. மர்மங்கள் தொடருகிறது என்பதை போல, ஆபாச படத்தில் நடித்து பல நடிகைகள் உயிரிழந்துள்ள நிலையில், 25 வயது இளம் நடிகை உயிருக்கு போராடும் சோகம் நடந்து வருகிறது.

Emily Willis Went Coma: உயிருக்கு போராடும் பிரபல ஆபாச பட நடிகை; 700 படங்களில் நடித்து படுத்த படுக்கையாக சோகம்.!
Emily Willis (Photo Credit: Wikipedia / @NDTV X)

மார்ச் 11, கலிபோர்னியா (Cinema News): தென் அமெரிக்காவில் உள்ள அர்ஜென்டினா பிறந்து, பின்னாளில் அமெரிக்காவின் சாண்டியாகோ நகரில் குடிபெயர்ந்த பெண்மணி எமிலி வில்லிஸ் (Emily Willis). இவர் தொடக்கத்தில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி, கடந்த 2017 ஆம் ஆண்டுக்கு முன் டேட்டிங்-க்கு பயன்படுத்தப்பட்ட டின்டர் செயலியால் ஆபாச படத்தில் நடிக்கத் தொடங்கினார்.

700 ஆபாச படங்களில் நடித்த நடிகை: கடந்த 2017 ஆம் ஆண்டு இவர் தொடர்பான முதல் இரண்டு ஆபாச காட்சிகள் படம்பிடித்து வெளியிடப்பட்ட நிலையில், அதற்கு கிடைத்த வரவேற்பு காரணமாக அடுத்தடுத்து என 700 படங்களில் நடித்திருந்தார். பின் கடந்த 2022 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஆபாச படங்களில் நடிக்கவில்லை. இந்நிலையில், கலிபோர்னியாவில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்த நடிகை எமிலி, திடீர் மாரடைப்பு மற்றும் உடல் நலக்குறைவு (Porn Star Emily Critical) காரணமாக பிப்ரவரி 5ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். Sophia Leone Passes Away: பிரபல ஆபாச பட இளம் நடிகை, 26 வயதில் மரணம்: சோகத்தில் ரசிகர்கள் & குடும்பத்தினர்.!

மருத்துவமனையில் தொடர் சிகிச்சை: அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமாக இருப்பதாக கூறப்படும் நிலையில், அவர் கோமா நிலையில் கலிபோர்னியாவில் இருக்கும் தவுசண்ட் ஓக்ஸ் நகரின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மாரடைப்புக்கு சிகிச்சை பெற்ற நடிகை தற்போது கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக அவரின் தந்தை தெரிவித்துள்ளார். 25 வயதாகும் இளம் ஆபாச பட நடிகை மரணப்படுக்கையில் உயிருக்கு போராடி வருவது, பிற ஆபாச பட நடிகைகளிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடரும் மரணங்கள்: கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 3 ஆபாச பட நடிகைகள் அடுத்தடுத்து உயிரிழந்த நிலையில், தற்போது மற்றொரு நடிகை மரணப்படுக்கையில் இருப்பது தெரியவந்துள்ளது. ஆபாச பட திரையுலகை பொறுத்தமட்டில், அதில் நடித்து வரும் பல நடிகைகள் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டு உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது. 700-க்கும் மேற்பட்ட ஆபாச திரைப்படங்களில் தனது உடலை வருத்தி நடித்துக் கொண்ட நடிகையின் நிலை கேள்விக்குறியாகி இருக்கிறது. இன்ஸ்டாகிராமில் இவருக்கு 20 இலட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பாளர்களும் இருக்கிறார்கள்.

(The above story first appeared on LatestLY on Mar 11, 2024 02:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).