BiggBoss S7 Grand Finale: நீண்ட பயணத்தின் இறுதிக்கட்டம்: இன்று பிக் பாஸ் கிராண்ட் பினாலே..! தவறவிடாதீர்கள்.!!
கடந்த 104 நாட்களாக பிக் பாஸ் இல்லத்திற்குள் போட்டியிட்டவர்களில், 5 பேர் இறுதி போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் வெற்றியாளர் ஆவார்.
ஜனவரி 14, சென்னை (Cinema News): விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் (BiggBoss Tamil) தொடருக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக, அடுத்தடுத்து என ஆண்டுக்கு ஒருமுறை பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. முந்தைய சீசன்களை போல தற்போதைய ஏழாவது சீஸனும் மக்களிடம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த சீசனும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது.
பிக்பாஸ் 7 போட்டியாளர்கள் விபரம்: அக்டோபர் 1ஆம் தேதி முதல் பிக்பாஸ் சீசன் 7 (Bigg Boss Season 7 Tamil) தொடங்கி, தற்போது அதன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14-ம் தேதி இன்று வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். ஏழாவது சீசனை பொறுத்தமட்டில், பிக் பாஸ் வீட்டிற்குள் பாவா செல்லத்துரை, யுகேந்திரன், அனுஷா, பிரதீப் ஆண்டனி, அன்ன பாரதி, ஐசு, பாலா, பிராவோ, அக்ஷயா, ஜோவிகா, அனன்யா, கூல் சுரேஷ், விக்ரம், நிக்சன், ரவீனா, பூர்ணிமா, விசித்திரா, விஜய் தினேஷ், மாயா, மணிச்சந்திரா, அர்ச்சனா (Archana) ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
7 சீசனில் முதல் ரெட்கார்ட்: இவர்களில் பிரதிப் ஆன்டனி மட்டும் எந்த சீசனிலும் இல்லாத வகையில் நடப்பு ஆட்டத்திலிருந்து ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டார். அதனைத்தொடர்ந்து பாவா செல்லத்துரை போட்டியின் தொடக்கத்திலேயே வெளியேறிய நிலையில், பூர்ணிமா 96வது நாளில் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ரூபாய் 50 லட்சம் பணத்துடன் வெளியேறினார். Amaidhi Padai: 30 ஆண்டுகளை நிறைவு செய்த அமைதிப்படை: நிகழ்கால அரசியலுடன் எதிர்காலத்தை கணித்த அட்டகாசமான திரைப்படம்.!
இறுதிக்கட்ட கொண்டாட்டம்: வீட்டில் இறுதி வாரத்தில் அர்ச்சனா, மணிச்சந்திரா, மாயா, தினேஷ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இவர்களில் ஒருவர் வெற்றியாளராக கமல்ஹாசன் முன்னிலையில் அறிவிக்கப்படுவார். அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடைபெற்றுள்ள நிலையில், இன்று மாலை 6 மணி முதல் கிராண்ட் பினாலே கொண்டாட்டங்கள் நிறைவு பெற்றதும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்.
முதல் ப்ரோமோ வெளியானது: இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று தனது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று மாலை 6 மணியளவில் கொண்டாட்டங்களுடன் தொடங்கும் பிக் பாஸ் போட்டியின் இறுதி நிகழ்ச்சியை கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார். கொண்டாட்டங்களின் நிறைவாக வெற்றியாளரும் அறிவிக்கப்படுவார். முன்னதாகவே பிக் பாஸ் வெற்றியாளர் அர்ச்சனா தான் என்ற தகவலும் கசிந்து இருப்பதால், இறுதிநேரத்தில் அவரே வெற்றியாளராக அறிவிக்கப்படுவாரா? அல்லது மாற்றங்கள் இருக்குமா? மக்களின் வாக்கு யாருக்கு கிடைத்தது? என்ற பல கேள்விகளுக்கு இன்றைய நிகழ்ச்சி பதிலை தரும் என்பதால், பலரும் அதற்காக காத்திருக்கின்றனர். மாலை 6 மணியளவில் விஜய் தொலைக்காட்சியில் (Vijay TV) பிக் பாஸ் நிகழ்ச்சியை நேரலையில் கண்டு ரசிக்கலாம். அதேபோல, ஹாட்ஸ்டார் (Hotstar) செயலியில் பார்க்கலாம்.
(The above story first appeared on LatestLY on Jan 14, 2024 10:23 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

