ஜனவரி 14, சென்னை (Cinema News): கடந்த 1994 ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் அமைதிப்படை (Amaidhi Padai). இயக்குனர் மணிவண்ணன் - சத்யராஜ் கூட்டணியில் உருவான அமைதிப்படை திரைப்படம், முழுக்க முழுக்க அரசியல் கொண்ட திரைப்படமாகும். இந்த திரைப்படத்தில் சத்யராஜின் நாகராஜசோழன் கதாபாத்திரம் இன்று வரை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கப்படும் ஒரு கதாபாத்திரமாக இருந்த வருகிறது.

படத்தின் உருவாக்க குழு: மணிவண்ணனின் எழுத்து மற்றும் இயக்கத்தில், கே.பாலச்சந்தர், செந்தில்குமார், இளமுருகன் ஆகியோரின் சார்பில் எம்.ஆர் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், இளையராஜாவின் இசையில், சங்கரின் ஒளிப்பதிவில், வெங்கடேஸ்வர ராவ் எடிட்டிங்கில், கடந்த 13 ஜனவரி 1994 ஆம் ஆண்டு இப்படம் திரையரங்கில் வெளியாகி இருந்தது.

சோழர் பரம்பரையில் ஒரு எம்.எல்.ஏ: நடிகர்கள் சத்யராஜ், மணிவண்ணன், ரஞ்சிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த படத்தில், சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த மணிவண்ணனை வீழ்த்தி, அவரிடம் நட்பு பாராட்டி பின் நாகராஜசோழன் எம்எல்ஏவாக உருவெடுத்து, அதன் பின் செய்த அரசியல் குறித்த கதைய அம்சம் பலராலும் ரசிக்கப்பட்டு இருந்தது. இப்படம் 175 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக திரையரங்கல் ஓடி சாதனை படைத்தது. Dates Benefits: பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?.. அசத்தல் டிப்ஸ் இதோ.! 

Sathyaraj & Manivannan | Amaithi Padai Movie (Photo Credit: Wikipedia / @ksaddybruh X)

வெற்றபெற்ற அமைதிப்படை: இப்படத்தின் வெற்றி காரணமாக அன்று தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழியிலும் வெளியிடப்பட்டது. அன்றைய நாட்களில் அமைதிப்படை திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிய போது மகாநதி, சேதுபதி ஐஏஎஸ், வீட்டுல விசேஷங்க ஆகிய படங்களும் வெளியாகி இருந்தன. ஆனால் இந்த மூன்று படங்களிலும் அமைதிப்படையே ஏகபோக வெற்றியை பெற்று இருந்தது.

நடிகர்-நடிகைகள்: இப்படத்தில் சத்யராஜ், மணிவண்ணன், ரஞ்சிதா, கஸ்தூரி, சுஜிதா, மலேசியா வாசுதேவன், சிஆர் சரஸ்வதி, பேபி ஆர்த்தி, மீசை முருகேசன், எஸ்.எஸ் சந்திரன், காந்திமதி, அல்வா வாசு, ராம்போ ராஜ்குமார், ஆர்.சுந்தர்ராஜன், இந்திரஜா, விசித்ரா, தியாகு, வெள்ளை சுப்பையா ஆகியோரும் நடித்திருந்தனர். சீமானும் இப்படத்தில் ஒரு அங்கமாக பணியாற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.