Bigg Boss Tamil 9 Romance Vidoe (Photo Credit: @VijayTelevision X)

அக்டோபர் 23, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 (Bigg Boss Tamil Season 9)ல், இதுவரை 18 நாட்கள் கடந்துள்ளன. வீட்டில் இருந்து பிரவீன் காந்தி, அப்சரா ஆகியோர் எவிக்சன் (Bigg Boss Tamil Eviction) முறையில் வெளியேறினர். நந்தினி (Nandhini Bigg Boss Tamil 9) தனக்கு போட்டியின் தன்மை மிகப்பெரிய மனஉளைச்சலை தருவதாக வெளியேறி இருந்தார். எந்த சீசனாக இருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சண்டை, சச்சரவு, காதல், கிசுகிசு தொடர்பான பஞ்சாயத்துகள் இருக்கும். ஆனால், நடப்பு சீசனில் போட்டியாளர்களின் செயல்பாடுகள் எல்லை மீறிச் செல்வதாக பல பகீர் குற்றசாட்டுகள் எழுந்து இருக்கின்றன. God Mode Song: சூர்யா ரசிகர்களுக்கு தீபாவளி பரிசு.. வெளியானது கருப்பு படத்தின் God Mode பாடல்.!

பிக் பாஸ் வீட்டுக்குள் காதல் ஜோடிகள்?

பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றவர்களில் ஆதிரை & எப்ஜெ, அரோரா & துஷார், விஜே பார்வதி & கம்ருதீன் ஆகியோரின் செயல்பாடுகள் ஒருசமயத்தில் அண்ணன்-தங்கை உறவு, நட்பு என வெளியே கூறினாலும், பிற நேரங்களில் எல்லை மீறி செல்வது போல காட்சிகள் வெளியாகின்றன. இவ்வாறான ஒரு சூழ்நிலையால் துஷாரின் வீட்டு தலைவர் பொறுப்பும் நேரடியாக பிக் பாஸால் பறிக்கப்பட்டு இருந்தது. இவ்வகை குற்றசாட்டுகள் காரணமாக பிக் பாஸ் நிகழ்ச்சியை பெரும்பாலான மக்கள் பார்ப்பதையும் தவிர்த்து வருகின்றனர். கம்ருதீன் தான் பார்க்கும் பெண்களையெல்லாம் திருமணம் செய்யலாமா? என கேட்டு தொந்தரவு செய்வார் என ஆதிரை பேசியது சர்ச்சையை சந்தித்தாலும், அவரின் செயல்பாடுகள் அப்படியே இருப்பதாக பார்வையாளர்கள் விமர்சிக்கின்றனர். Vishal: சினிமா விருதுகள் மீது நம்பிக்கை இல்லை.. குப்பைத்தொட்டியில் போடுவேன் - விஷால் சர்ச்சை கருத்து.! 

எல்லை மீறும் கண்ணோட்டம் & வார்த்தை பரிமாற்றம்:

ஜோடிகளாக இருப்பவர்கள் ஒருபக்கம் இரட்டை அர்த்த வசனங்களை பேசிவிட்டு ஒன்றும் தெரியாது போல செயல்படுவது, பார்வையால் தனது மனநிலை மாற்றத்தை வெளிப்படுத்துவது, வீட்டின் கழிவறை கதவுகளை திறந்து பார்ப்பது என பல செயல்கள் அதிர்ச்சிதரும் வகையில் தொடருவதாக 24X7 பார்க்கும் பிக் பாஸ் ரசிகர்கள் குமுறுகின்றனர். இதில் வாட்டர்மெலன் ஸ்டாரும் தனது செயல்பாடுகள் எல்லை மீறுவது தெரியாமல் நடந்துகொள்வதாகவும் சொல்லப்படுகிறது. ஒருசில ஜோடியின் செயல்கள் பார்க்க சகிக்காத வகையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறாக பேச்சு, செயலில் நடக்கும் மாற்றங்களை மக்கள் ஒருபுறம் கழுவி ஊத்த, விஜய் டிவியும் இதனை கலாய்க்கும் வகையில் வீடியோ எடுத்து பின்னணி பாடலுடன் வெளியிட்டு இருக்கிறது. கிட்டத்தட்ட குறும்படம் போட்டு போட்டியாளர்களின் செயலை விஜய் டிவியே வீடியோ வெளியிட்டு இருக்கிறது. இவ்வாறான செயல்கள் பிக் பாஸ் நிகழ்ச்சி உண்மையில் போட்டியாளர்களின் செயலை வைத்து நடக்கிறதா? அல்லது திரைப்படம் போல 9வது சீசன் இயக்கமா? அதில் போட்டியாளர்கள் நடிக்கிறார்களா? என கேள்வி எழுப்பப்படுகிறது.

கேமிராவை போட்டியாளர்கள் மறந்ததாக ஒப்புக்கொண்ட விஜய் டிவி நிர்வாகம் (Onnume Puriyala ft Gana Nithya Bigg Boss Tamil Season 9):

பாட்டில் தரம் தொடர்பாக இன்றைய வீட்டுக்குள் பஞ்சாயத்து (Bigg Boss Tamil Season 8 Promo Today):

காரக்குழம்பு கனி & விஜே பார்வதி இடையே முற்றிய வாக்குவாதம் (VJ Parvathy & Kani Fight Bigg Boss Tamil 9):