Actor Vishal Podcast (Photo Credit : Youtube)

அக்டோபர் 20, சென்னை (Cinema News): தமிழ் திரையுலகில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். இவர் சமீபத்தில் நடித்து வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இவருக்கு சமீபத்தில் நடிகை சாய் தன்ஷிகாவுடன் நிச்சயதார்த்தமும் நடைபெற்றது. தற்போது நடிகர் விஷால் மகுடம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் ரவி அரசு இயக்கியுள்ளார். இந்த நிலையில் Yours Frankly Vishal என்ற பாட்காஸ்டில் விஷால் பேசியது சர்ச்சையை சந்தித்துள்ளது. இந்த பாட்காஸ்டின் முதல் எபிசோட் சமீபத்தில் வெளியாகிய நிலையில், அதில் விருதுகள் குறித்து விஷால் பேசிய கருத்துக்கள் சர்ச்சையை சந்தித்துள்ளது. Karuppu Poster: தீபாவளி ஸ்பெஷல் கிப்ட்.. சூர்யாவின் கருப்பு பட போஸ்டர் வெளியீடு.!

சர்ச்சையை சந்திக்கும் விஷாலின் கருத்து:

அந்த பாட்காஸ்டில் அவர் பேசியிருப்பதாவது, "விருதுகள் மீது எனக்கு நம்பிக்கை கிடையாது. அது பைத்தியக்காரத்தனம். 7 கோடி மக்களின் விருப்பங்களை, முடிவுகளை எப்படி 4 பேர் முடிவு செய்வார்கள்? மக்களுக்கு பிடித்த படம், பிடித்த நடிகர் என்ன என்பதை 4 பேர் உட்கார்ந்துகொண்டு முடிவு செய்வார்கள். அவர்கள் என்ன மேதாவிகளா? தேசிய விருதையும் சேர்த்து தான் கூறுகிறேன். மக்களிடம் சர்வே எடுத்து பார்த்தால் தெரியும். எனக்கு விருது கிடைக்கவில்லை என நான் கூறவில்லை. ஒருவேளை எனக்கு விருது கொடுத்தாலும் நான் போகும் வழியில் குப்பைத்தொட்டியில் தான் போடுவேன். அது தங்கத்தில் இருந்தாலும் அடகு வைத்து பணத்தை அன்னதானம் செய்வேன். விருது விழாக்களுக்கு செல்வதைக் கூட நான் விரும்ப மாட்டேன்.

விருதுகள் மீது நம்பிக்கை இல்லை:

ஆனால் விருதை பலரும் கவுரவமாக நினைக்கின்றனர். என் வீட்டில் அலமாரியில் மனிதம் சார்ந்த விருதுகள் மட்டுமே இருக்கும். சினிமாவைப் பொறுத்தவரையில் சண்டக்கோழி 200வது நாள் கேடயம், இரும்புத்திரை 100 வது நாள் கேடயம் மட்டும் இருக்கும். மற்ற எந்த விருதுகளும் என் வீட்டின் அலமாரியில் இருக்காது" என கூறினார். இது தொடர்பான தகவல்களை இணையத்தில் பகிர்ந்துள்ள நெட்டிசன்கள் பலரும், விருதுகள் வேண்டாம் என்றால் அதுகுறித்து பேசாமல் இருக்கலாம். குப்பையில் போடுவேன் என்று சொல்வது சினிமாவில் விருது வாங்கும் சக நடிகர்களை அவமதிப்பதற்கு சமம் என தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் விஷால் விருதுகள் தொடர்பாக கூறிய கருத்து: