ஜனவரி 12, ஈவிபி பிலிம் சிட்டி (Televison News): விஜய் (Vijay TV) டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil) நிகழ்ச்சி, 98 நாட்களை கடந்து ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. ரியாலிட்டி ஷோ-வான பிக் பாஸ் அடுத்த வாரங்களில் இறுதிக்கட்டத்தை எட்டவுள்ளது. 18 போட்டியாளர்கள் பங்கேற்ற பிக் பாஸ் தமிழ் சீசன் 8 போட்டியில், இறுதிக்கட்டத்தை நோக்கிய பயணத்தில் தீபக், ஜாக்குலின், முத்துக்குமரன், பவித்ரா, ராயன், சௌந்தர்யா, வர்ஷினி, விஷால் ஆகியோர் எஞ்சி இருக்கின்றனர். ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, ரியா, வர்ஷினி, ஷிவ குமார், ஆர்.ஜே ஆனந்தி, சாச்சனா, தர்ஷிகா, சத்யா, ரஞ்சித், அன்ஷிதா, ஜெப்ரி, மஞ்சரி, ராணவ், அருண் ஆகியோர் வீட்டில் இருந்து வெளியேறி இருக்கின்றனர். Game Changer Box Office: ‘கேம் சேஞ்சர்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? அதிகாரப்பூர்வ தகவல் வெளியீடு..!
புதிய கோணத்தில் மாறிய ஆட்டம்:
வாரத்தின் சனிக்கிழமையான நேற்று அருண் வீட்டில் இருந்து மக்களின் வாக்குகளின் அடிப்படையில் எவிக்ட் செய்யப்பட்டார். கடந்த வாரத்தை பொறுத்தவரையில் பிக் பாஸ் வீட்டுக்குள் இந்த சீஸனின் முந்தைய போட்டியாளர்களும் அனுப்பி வைக்கப்பட்டு, ஆட்டம் புதிய பாதையில் பயணிக்க தொடங்கியுள்ளது. முதலில் இருந்த வன்மம், கோவம் அனைத்தும் கடந்து, போட்டியாளர்கள் தங்களின் உண்மையான விளையாட்டை தொடங்கி இருக்கின்றனர். இந்த சமயத்தில் அருண் எலிமினேஷன் செய்யப்பட்டது பார்வையாளர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. பிக் பாஸ் வீட்டில் தனிமனிதருக்கு பங்கம் இழைக்காத ஒரு நபராக இருந்து வந்த அருண், வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டது பலராலும் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.
தீபக் வெளியேற்றப்படலாம்?
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையான இன்றும் எலிமினேஷன் முறையில் ஒருவர் வெளியேற்றப்படலாம் என்ற நிலையில், அதில் தீபக் வெளியேறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பிக் பாஸ் வீட்டினை பொறுத்தவரையில் தீபக் தனக்கான இலக்கை நோக்கி எளிமையாக, எந்த விதமான பிரச்சனையும் இன்றி பயணித்து வரும் நிலையில், அவரும் இன்று வெளியேறலாம் என கூறப்படுகிறது. அதேநேரத்தில், நேற்று வெளியேறிய அருணுக்கு முத்துக்குமரன் தனது நன்றியை தெரிவிக்க, அருணும் முத்துகுமாரனுக்கு வாழ்த்துகளை சொல்லிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டார்.
எலிமினேட் செய்யப்பட்ட பின் அருண் - முத்துக்குமரன் இடையே நடந்த உரையாடல்:
#muthu to #arun : yaraiyum kiltharama nadhunadhu illa
arun to muthu : vetri kaga odura orudha epdi irrukkanum na adhu muthu mari irrukkanum
More Updates Followed By @BiggBossVignesh Thank You#biggbosstamil8 #biggbosstamil pic.twitter.com/9DooOj4TFc
— Bigg Boss Vignesh (@BiggBossVignesh) January 11, 2025