Game Changer (Photo Credit: @comicverseyt X)

ஜனவரி 11, சென்னை (Cinema News): தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் (Director Shankar) இயக்கத்தில், ராம் சரண் நடிக்கும் 'கேம் சேஞ்சர்’ (Game Changer) திரைப்படம் உலகம் முழுவதும் நேற்று வெளியானது. 'இந்தியன் 2' தோல்விக்குப் பிறகு ஷங்கரும், ‘ஆச்சார்யா’ பட தோல்விக்குப் பிறகு ராம் சரணும் (Actor Ram Charan) இணைந்துள்ள திரைப்படம் ஆகும். கியாரா அத்வானி, எஸ்ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, அஞ்சலி, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப் படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார். படத்தை தில் ராஜு தயாரித்துள்ளார். மேலும், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கதையை ஷங்கர் படமாக்கியுள்ளார். Game Changer Movie Review: கேம் சேஞ்சர் திரைப்பட விமர்சனம் - பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் மாஸ் காட்டினாரா?!

முதல் நாள் வசூல்:

இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று (ஜனவரி 10) திரையரங்குகளில் வெளியானது. முதல் நாளில் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. ரூ.400 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவான இப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ.186 கோடியை வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்தடுத்து பொங்கல் விடுமுறை நாட்கள் இருப்பதால் படத்தின் வசூல் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேம் சேஞ்சர் முதல் நாள் வசூல்: