Bigg Boss Tamil Season 8: 24 மணிநேர கவுன்டவுன்.. பிக் பாஸ் தமிழில் முதல் வெளியேற்றத்திற்கான நாமினேஷன்.. ப்ரோமோ உள்ளே.!
24 மணிநேரத்திற்குள் முதல் போட்டியாளர் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார் என பிக் பாஸ் அறிவித்துள்ள காரணத்தால், நேற்று உள்ளே சென்ற போட்டியாளர்கள் அனைவரும் பீதிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
அக்டோபர் 07, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil), நேற்று முதல் கோலாகலமான கொண்டாட்டத்துடன் தொடங்கியுள்ளது. இந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் இல்லத்திற்குள் ரவீந்திரன், சாச்சனா நவிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், ஆர்ஜெ ஆனந்தி, சுனிதா, ஜெப்ரி, ரஞ்சித், பவித்ரா, சௌந்தர்யா, அருண் பிரசாத், தர்ஷிகா, விஜே விஷால், அன்ஷிதா, அர்னவ், முத்துக்குமரன், ஜாக்குலின் ஆகியோர் போட்டியாளர்களாக நுழைந்தனர். Bigg Boss Season Tamil 8: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 இல்லத்திற்குள் யார்-யார்?.. முழு லிஸ்ட் இதோ.!
24 மணிநேரத்தில் முதல் எலிமினேஷன்:
போட்டியின் முதல் நாளே ஆண்கள்-பெண்களுக்கு எந்த அறை வேண்டும் என டாஸ்க் வைக்க, போட்டியாளர்களின் ஆண்கள் பிரிவு நாமினேஷன் குறித்த விபரத்தை ஒப்புதலாக பெற்றுக்கொண்டு அறையை விட்டுக்கொடுத்து. இந்த விஷயத்தில் ஜாக்குலினுக்கு உடன்பாடு இல்லாமல், அவர் வீட்டின் வெளியில் படுத்து உறங்குவது போன்ற காட்சிகளுடன் நேற்று நிறைவு பெற்றது. நேற்றே பிக் பாசில் 24 மணிநேரத்தில் முதல் எலிமினேஷன் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
தொடங்கியது நாமினேஷன்:
இதனிடையே, இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில், பிக் பாஸ் முதல் எலிமினேஷன் சுற்று நடக்கிறது. அதில் ஒவ்வொருவரும் தங்களின் எதிர்ப்பு போட்டியாளரை நாமினேட் செய்து வருகின்றனர். இந்த நாமினேஷனில் அதிக புள்ளிகள் பெற்றவர்கள் எலிமினேட் செய்யப்படுவாரா? அல்லது ஏதேனும் ரகசியம் உள்ளதா? என தெரியவில்லை. அடுத்து வரும் ப்ரோமோ அல்லது இன்றைய நாளின் நிகழ்ச்சியில் அதற்கான விடை இருக்கலாம் என தெரியவருகிறது. அந்த வகையில், இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
முதல் நாளில் மிகப்பெரிய பிரச்சனையை எதிர்கொண்டுள்ள போட்டியாளர்களின் பீதி காட்சிகள் உங்களின் பார்வைக்கு:
#Day1 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 8 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil @mynanduonline #BBTamilSeason8 #Disneyplushotstartamil #VijayTelevision pic.twitter.com/qXgT3VT3Pf
— Vijay Television (@vijaytelevision) October 7, 2024
(The above story first appeared on LatestLY on Oct 07, 2024 11:15 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

