அக்டோபர் 06, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8, இன்று முதல் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. முதல் நாளான இன்று போட்டியாளர்கள் அறிமுகம் என்பதால், ஞாயிற்றுக்கிழமை இரவு 6 மணிமுதல் நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. கடந்த 7 சீசன்களை நடிகர் கமல் ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்த நிலையில், விஜய் சேதுபதி இம்முறை நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். வரும் 106 நாட்கள் 18 போட்டியாளர்கள் தங்களின் தனித்திறமைகளை மக்கள் மத்தியில் உணர்த்தவுள்ளனர். போட்டியாளர்களின் விபரம் பின்வருமாறு.,
1. தயாரிப்பாளர் ரவீந்திரன் (Ravindran Chandrasekaran):
பிக் பாஸ் சீசனை விமர்சித்து வந்த ரவீந்தர், முதல் போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டார். அவமானம் இல்லாத வருமானம் இல்லை என்பதை நோக்கி, அவர் பிக் பாஸ் வீட்டில் பயணித்து இருக்கிறார். உடல் எடை குறையாமல் அதிகரித்துக்கொண்டே சென்றதால், அதனை பெயராக பயன்படுத்தினேன்.ஜாலியான முகத்தை காண்பிக்கவே பிக் பாஸ் வந்துள்ளேன். அதற்கான வாய்ப்பை பயன்படுத்தி இருக்கிறேன். கடந்த 5 சீசன்களை தொகுத்து வழங்கியிருக்கிறேன் என ரவீந்தர் பேசினார். Bigg Boss Season Tamil 8: விஜய குருநாத சேதுபதி-ஐ வரவேற்று மகிழ்ந்த பிக் பாஸ்; வீட்டை இரண்டாக பிளந்தது எதனால்?.. தொடங்கியது பிக் பாஸ் சீசன் 8..!
2. சாச்சனா நவிதாஸ் (Sachana Namidass):
செஸ் போட்டியில் ஆர்வம் கொண்ட சாட்சணா (21 வயது), தனது அம்ம்மாவை ராணியாக்கும் முயற்சியில் சிப்பாயாக பிக் பாஸ் இல்லத்திற்குள் வந்துள்ளார். இவர் குறும்புத்தனம் கொண்டவர் ஆவார். அம்மா ஊடகத்துறைக்குள் வர வேண்டும் என ஆசைப்பட்ட நிலையில், அவரால் இயலாததால் மகள்களை அதற்கான வழிகாட்டுதல் வழங்கி நெறிமுறைப்படுத்தி இருக்கிறார். இவர் ஆகஸ்ட் 15, மஹாராஜா ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது பிக்பாஸ் இல்லத்திற்குள் வந்துள்ளார். மஹாராஜா படத்தில் இவர் விஜய் சேதுபதியின் மகள் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
3. தர்ஷா குப்தா (Dharsha Gupta):
திரைப்படங்களில் கதாநாயகி, சீரியலில் வில்லி என இளைஞர்களின் கனவுக்கன்னியாக வாழ்ந்து வந்த தர்ஷா குப்தா, பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார். கோவையை சேர்ந்த தர்ஷா குப்தா, வீட்டின் செல்லப்பிள்ளை ஆவார். ஜாலியான, பேசிக்கொண்டே இருக்கும் குணம் கொண்ட நடிகை தர்ஷா, எப்போது நேர்மறையான எண்ணத்தை பரப்புவர். ஆசிரியராக வேலை பார்த்து வந்த தர்ஷா குப்தா, சென்னைக்கு வந்து பின்னாளில் பிரபலமாக தொடங்கி இருக்கிறார். பல கனவுடன் சென்னைக்கு வந்தவர், எதிர்பாராத விதமாக சீரியலில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி படிப்படியாக முன்னேறி, இன்று படங்களில் நடித்துள்ளார், நடிகையாகவும் உயர்ந்துள்ளார். ஊரடங்கால் முடங்கிக்கிடந்த பலரையும் ரீல்ஸ், புகைப்படம் பதிவிட்டு பிரபலமான நபர்களில் இவரும் முக்கியமானவர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் இவர் இடம்பெற்று மக்களின் மனதை கவர்ந்து இருந்தார். நான் நல்லவனுக்கு நல்லவன், கெட்டவனுக்கு கெட்டவன் என இருப்பேன். நான் கொஞ்சம் எமோஷனல் ஆன பெண். சிரித்துக்கொண்டே கலாய்க்கும் குணமும் என்னிடம் உண்டு என நடிகை தெரிவித்தார். Actor Ranjith Roasted by Vijay Sethupathi: கவுண்டம்பாளையம் ரஞ்சித்தை வறுத்தெடுத்த விஜய் சேதுபதி; காரணம் என்ன?.. விபரம் உள்ளே.!
4. சத்யா (Sathya):
சில கதவுகள் வாழ்க்கையில், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் திறந்து இருக்கும். அப்படியான எனது வாழ்க்கையின் முதல் கதவு உடற்பயிற்சிக்கூடத்தில் திறந்தது. உடற்பயிற்சி மீது திடீரென ஏற்பட்ட ஆர்வத்தில் தொடர்ந்து உடற்பயிற்சியில் ஈடுபட்டு வந்தவர், ஆணழகன் போட்டியில் கலந்துகொண்டு வெள்ளிப்பதக்கமும் வென்றார். அதனைத்தொடர்ந்து படிப்படியாக உழைத்து முன்னேறி வரும் சத்யா, சீரியல்களில் நடித்து வந்தார். பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வந்தவர், இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடியெடுத்து வைத்துள்ளார். தனது வாழ்க்கையில் முன்னேற்றத்தை அடைய பிக் பாஸ் இல்லத்திற்குள் அவர் சென்றுள்ளார் என அவர் கூறினார்.
5. தீபக் (Deepak Dinkar):
பல சீரியல்களில் நடிகர், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் என பன்முகத்தன்மை கொண்டவர் தீபக். வாழ்க்கை என்ற ரேஸில், தொடர்ந்து ஓடிக்கொண்டு இருக்கும் இவர், படிப்படியாக முன்னேற்றத்தை சந்தித்தவர். அவரின் வாழ்க்கையில் பல ஏற்ற-இறக்கத்தை கண்டார். பல விஷயங்களை கற்றுத்தேர்ந்தவர், வாழ்க்கையின் அடுத்தகட்டத்துக்கு செல்ல முடிவு செய்து பிக் பாஸ் இல்லத்திற்குள் வந்துள்ளார். கஷ்டங்களை அனுபவித்தாள் தான்முனேற்றம் கிடைக்கும் என புரிந்துகொண்டு, பிக் பாஸ் மேடையை தனக்கானதாக்கி முன்னேற்றப்பாதையை உருவாக்க முயற்சிக்கிறார். எனக்குள் இருக்கும் என்னவனை விலக்கி, முன்னேற்றத்திற்காக திறமைசாலிகளுடன் போட்டியாக மோத இருக்கிறேன். எனது வாழ்க்கையின் முக்கிய இடமாக பிக் பாஸ் வீடு இருக்கும் என தீபக் தெரிவித்தார்.
6. ஆர்ஜெ ஆனந்தி (RJ Ananthi Iyappan):
சிறுவயதில் இருந்து சுயமரியாதை தொடர்பான எண்ணத்தை வளர்த்து வந்த ஆனந்தி, ரேடியோவை கேட்டுப்பழகி பின்னாளில், அதன் மீதான தாக்கம் அதிகரித்து அதிலேயே பணியாற்ற தொடங்கி இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக மக்களை அதிகம் சென்றடைய வேண்டும் என்ற ஆவலில், பிக் பாஸை தேர்வு செய்துள்ளார். புத்தகம் படிக்கும்போது கேள்விகளை உண்டாக்கி, அவர்களை சந்திக்க வேண்டும் என்பதையும், தேடல், கட்டமைப்பை பற்றி ஆர்வத்துடன் கற்றுத்தேறும் ஆனந்தி, தனது வாழ்க்கை முன்னேற்றத்திற்க்ககவும், எதிர்கால பநயனத்திற்காகவும் பிக் பாஸ் இல்லத்தை தேர்வு செய்துள்ளார். தன்னைப்பற்றிய தேடலுக்கும், வெளிப்புற நபர்களின் சிந்தனைக்கும் தீனிபோடும் விதமாக இவர் பல கேள்விகளுடன் பிக் பாஸ் இல்லத்திற்குள் தனது பதிலை எதிர்நோக்கி செல்கிறார். இவரின் கேள்விக்கு பதில் கிடைக்குமா? கேள்வியே மீண்டும் கிடைக்குமா? என ஆனந்தி கூறுகிறார்.
7. சுனிதா கோகாய் (Sunita Gogai):
நடன போட்டியாளர், தமிழ் திரைப்பட நடிகை, சீரியல் என பல கஷ்டங்களை தாண்டி முன்னேறி வந்தார் சுனிதா. கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோரின் நம்பிக்கையுடன் பெற்றோரின் ஆதரவுடன் சென்னை வந்தவர், நடன கலைஞராக அறிமுகமாகி, குக் வித் கோமாளி நிகழ்ச்சியால் கோமாளியாக ஏற்றுக்கொள்ளப்பட்டார். இதனால் வாழ்க்கையில் கஷ்டங்களை கண்டு, அதனை வெற்றியாக்கி முன்னேறி வந்துள்ள சுனிதா, பிக் பாஸ் இல்லத்திற்குள் நுழைந்து தன்னை மேற்படி வளர்த்துக்கொள்ள முனைகிறார். கஷ்டங்கள் இருந்தாலும் அதனை எதிர்கொண்டு வெற்றியடைய நினைக்கிறார். ஒரு விளையாட்டில் 100 ரன்கள் அடித்தாலும், அடுத்த விளையாட்டில் பூஜ்யத்தில் இருந்து தான் தொடங்க வேண்டும். சென்னை என்னை குடும்பம் போல அரவணைத்து. மும்பையில் அனைவரும் ஓடிக்கொண்டு இருந்ததால், எனக்கு கிடைக்கவில்லை. Bigg Boss Tamil Season 8: முதல் நாளே பிக் பாஸை டென்ஷனாக்கி, தூக்கியடிக்கப்பட்ட 6 போட்டியாளர்கள்.. அதிரடி சம்பவம்.!
8. ஜெப்ரி (Jeffry) என்ற டிங்கு:
பாடகரான ஜெப்ரி, கானா பாடல்கள் வாயிலாக மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். பயிற்சியாளர் இல்லாமல் அம்மா உதவியுடன் பாடலை கற்றுத்தேர்ந்த ஜெப்ரி, படிப்படியாக இளைஞர்களுடன் கானா பாடல் பாடி, பின்னாளில் கானாவை தனது உயிர் மூச்சாக்கிக்கொண்டார். நான் பிக் பாஸ் இல்லத்திற்குள் செல்வதால், எனது வீட்டின் நிலைமை மாறும். நான் தான் அம்மாவை கவனிக்க வேண்டும். எனது அம்மாவின் உதவியுடன் அடையாளம் பெற்றேன், அவரை போற்ற பாடுபடுகிறேன். நான் அமைதியாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். என்னால் முடிந்தது பலரையும் சிறக்க வைப்பேன் என ஜெப்ரி கூறினார்.
9. நடிகர் ரஞ்சித் (Actor Ranjith):
விவசாய பின்னணி குடும்பத்தை சேர்ந்த ரஞ்சித் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். தற்போது பிக் பாஸ் குடும்பத்துடன் இணைந்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரஞ்சித் கலந்துகொண்டதற்கு முக்கிய காரணமான அன்பை தமிழ் மக்கள் ஏற்கனவே கொடுத்துவிட்டனர். மக்களிடம் அன்பை விதைத்து அறுவடை செய்ய ரஞ்சித் வந்துள்ளார். சர்ச்சைகளில் சந்தித்த ரஞ்சித்தை, கவுண்டம்பாளையம் படத்திற்கு பின் பார்த்தபோது மாற்றம் தெரிந்தது. அதனால் வருத்தப்பட்டேன். அதனால் ஏற்பட்ட தவறை உணர்ந்துகொண்டேன். கலை எனக்கு நல்ல பாடத்தை பயிற்றுவித்தது என நடிகர் ரஞ்சித் கூறினார்.
10. பவித்ரா ஜனனி (Pavithra Janani):
சீரியல் நடிகையான பவித்ரா, அதன் கதாபாத்திரங்களால் பெரும்பாலும் அழைக்கப்படுவார். கூட்டத்தில் ஒருவராக இருந்த பவித்ரா, இன்று சீரியலில் அறிமுகமாகி நல்ல அடையாளத்தை பெற்றுள்ளார். 10 ஆண்டுகளாக சீரியலில் தோன்றினாலும், வாழ்வின் அடுத்தகட்ட முயற்சிக்காக பிக் பாஸை தேர்வு செய்துள்ளார். ஏற்கனவே பிக் பாஸ் போட்டியாளர்களை போல குணம் கொண்ட குடும்பத்தினரை கொண்ட பவித்ரா, தனது வாழ்வின் அங்கத்தை ரசித்து வாழ்தலும், தலைமுறை இடையேயான வேறுபாடுகளை கொண்ட ஆட்களுடன் வாழ்ந்து வருகிறார். இதனால் அவருக்கு பிக் பாஸ் எளிதாக இருக்கும். எனது உண்மையான குணத்தை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என முயற்சித்து பிக் பாஸ் இல்லத்திற்குள் வந்துள்ளார். கடந்த 2020ல் நான் உங்களுடன் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன், இன்று உங்களுடன் நிற்கும் சூழலுக்கு வந்துவிட்டேன் என கூறினார்.
11. சௌந்தர்யா (Soundariya Nanjundan):
பெங்களூரை சேர்ந்த சௌந்தர்யா, சென்னையில் வளர்ந்தவர் ஆவார். தனது குரலால் நண்பர்களை இழந்தவர், எப்போதும் கேலி-கிண்டலை எதிர்கொண்டு இருக்கிறார். ஆனால், படிப்பில் கவனமாக இருந்தவர், ஆடை அலங்காரத்துறையை தேர்வு செய்து வாழ்க்கையை நகர்த்தி இருக்கிறார். பின் மீடியாவில் இனைந்து, சினிமாவின் மீதான விருப்பத்தால் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி வந்துள்ளார். தற்போது தனக்கு பிடித்த பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக மக்களின் அங்கீகாரத்தை பெறும் சௌந்தர்யா, தனது வாழ்க்கையை திட்டமிடலுடன் செயல்படுத்தவும் முயற்சிக்கிறார். எங்கு தனது குரலால் வாய்ப்பை இழந்தாரோ, அந்த குரலை வைத்தே தான் சாதிக்க வேண்டும் என அவர் கூறுகிறார். Dharsha Gupta: இளைஞர்களின் கனவுக்கன்னி.. பிக் பாஸ் இல்லத்திற்குள் தர்ஷா குப்தா.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
12. அருண் பிரசாத் (Arun Prasadh):
விஜய் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து மிகப்பெரிய அளவில் புகழ்பெற்ற பாரதி, சிறுவயதில் இருந்து படத்தில் நடிக்க வேண்டும் என மீடியா துறையில் பயின்று 50 குறும்படத்தை இயக்கி இருக்கிறார். வாழ்க்கையில் கஷ்டப்பட்டு சிரமத்தை சந்தித்தபோது விஜய் டிவி நிர்வாகம் தனது வாய்ப்பை அவருக்கு வழங்கியது. தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றியோ, தோல்வியோ வீட்டிற்குள் இருந்து மக்களை கவனிப்பது, அவர்களின் கவனத்தை பெறுவது ஆகிய முடிவில் அருண் வந்துள்ளார். மேயாத மான், ஜடா ஆகிய படங்களில் இவர் நடித்துள்ளார்.
13. தர்ஷிகா (Tharshika):
நடிகை தர்ஷிகா சீரியலில் நடித்து வருகிறார். பல படங்களுக்கான வாய்ப்புகள் கிடைத்தபோதிலும், இரண்டாவதாக தேர்வு செய்யப்பட்டேன். எஞ்சினியரிங் முடித்து ஊடகத்தின் மீது ஏற்பட்ட ஆர்வத்தால் பல போராட்டங்களுக்கு பின் நடிகையாக உயர்ந்துளேன். எனக்கு கிளாசிக்கல் டான்ஸ் பிடிக்கும். எப்போதும் நடனம் என்பது விருப்பமான ஒன்று ஆகும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நான் செல்வது, எனது குடும்பத்திற்காக உதவும். நான் ஓதவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். அதனால் எனக்கு திருப்பு முனையான பிக் பாஸை நான் பயன்படுத்த வேண்டும் என நினைத்தேன். மக்கள் அங்கீகாரம் கொடுத்தால், எனக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். சீரியலில் என்னை வில்லி கதாபாத்திரத்தில் பார்த்தவர்கள் என்னை வில்லி என நினைக்கலாம். ஆனால், நான் அப்படி இல்லை. வாழ்க்கையில் பல அடிகளை வாங்கியுள்ளதால், மிகவும் எதிர்ப்புத்திறன் கொண்ட பெண்ணாகவும் இருப்பேன். கட்டாயம் பலசாலி என நிரூபணம் செய்வேன் என தர்ஷிகா கூறினார்.
14.விஜெ விஷால் (VJ Vishal):
விஜய் தொலைக்காட்சியில் பார்வையாளராக வந்து, இன்று நடிகராக அவர் உயர்ந்துள்ளார். பாக்கியலட்சுமி தொடரில் செல்லப்பிள்ளை எழிலாக அறிமுகம் ஆனவர், மிகவும் கஷ்டப்படும் குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். எஞ்சினியரிங் படிக்கும்போதே குடும்பத்தின் வறுமைக்காக வேலை பார்த்து மேற்படி பயின்றார். ஜோடி நம்பர் 1, பாக்கியலட்சுமி என தொடர்ந்தவர், இன்று பல தமிழ் குடும்பத்தின் மகனாக ஆகிப்போனார். சினிமாவுக்கு சென்று மக்களை மகிழ்விக்க வேண்டும் என முடிவெடுத்து, விஷாலாக மக்கள் மத்தியில் அறிமுகம் செய்ய எழில் விஷாலாக பிக் பாஸை தேர்வு செய்துள்ளார்.
15. அன்ஷிதா ( Akbarsha):
கேரளாவை பூர்வீகமாக கொண்ட சீரியல் நடிகை அன்ஷிதா, செல்லமாவாக தமிழக மக்களிடையே அறிமுகமானவர். இவர் மலையாளத்தில் சிறிய அளவிலான கதாபாத்திரங்களில் நடித்து வந்த நிலையில், பின் சீரியல் நடிகையானார். விஜய் டிவியில் செல்லம்மா வாயிலாக தமிழக மக்களின் அன்பை பெற்றவர், தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். அம்மாவின் வாயிலாக கிடைத்த அடையாளம் இது. அம்மாவின் பராமரிப்பில் வளர்ந்து வந்தாலும், எனது செயல்களை அம்மாவே ஊக்குவித்தார். நான் உயிருடன் இருக்க எனது நண்பர்களே காரணம். அவர்களுக்கு மிக்க நன்றிகள். நான் தற்கொலை அளவு சென்றும் மீண்டு வந்தேன். உண்மையான அன்புக்கு நான் ஏங்கி இருக்கிறேன். மக்கள் என் அன்பை புரிந்துகொள்ள வேண்டும் என கூறினார்.
16. அர்னவ் (Arnav):
பிக் பாஸ் எனது கனவு. இன்று வரை எனது கனவாக இருக்கிறது. சீரியல் நடிகரான அர்னவ். எனக்கு பிடிக்காத விஷயத்தை வற்புருத்தினாலும் செய்யமாட்டேன். என்னுடன் பழக நண்பர்கள் கிடைத்துவிட்டால் விளையாட்டுத்தமாக மாறிவிடுவேன். இரண்டாவது வயதில் இருந்து 17 ஆண்டுகள் விடுதியில் இருந்தேன். இதனால் அம்மா-அப்பாவின் அன்பு கிடைத்ததில்லை. அம்மாவின் ஆசி எப்போதும் எனக்கு உண்டு. சினிமாவுக்கு என சென்னைக்கு வந்து, முதலில் நடிக்கும்போது தடுமாற்றம் இருந்தது. விளம்பரத்தில் நடிக்கத் தொடங்கி, சீரியலில் நடித்து மிகப்பெரிய உயரத்திற்கு சென்றபோது, திடீரென சறுக்கலை சந்தித்தேன். சறுக்கல் வந்ததும் குடும்பம், நண்பர்கள் சிதைந்தனர். பழைய அர்னவை போல வரவேண்டும் என ஓடுகிறேன், அதன் ஒரு அடிக்கல் பிக் பாஸ். இனி என்னைப்பற்றி உங்களுக்கு தெரியவரும். நான் யார் என்பதை பிறரைவிட நான் சொல்ல வேண்டும். ஒன் மேன் ஆர்மியாக உள்ளே சென்று, படையுடன் திரும்பி வருவேன் என கூறினார். Bigg Boss Season Tamil 8: விஜய குருநாத சேதுபதி-ஐ வரவேற்று மகிழ்ந்த பிக் பாஸ்; வீட்டை இரண்டாக பிளந்தது எதனால்?.. தொடங்கியது பிக் பாஸ் சீசன் 8..!
17. முத்துக்குமாரன் (Muthukumaran):
தமிழ் பேசும் பையன் பழமைவாதம் பேசுவேன் என நினைத்தார்கள். நானும் மக்களிடம் பிரபலமடைய வேண்டி, பக்குவமடைய வேண்டி பிக் பாஸ் மேடையை தேர்வு செய்துள்ளேன். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லல் கிராமத்தை சேர்ந்த இரட்டைக்குழந்தைகளில் முத்துக்குமரன் ஒருவர். தனது வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் செதுக்கிய அம்மாவை போற்றி, ஆசான் ஆசிரியர் காண்பித்த வழியால், சென்னைக்கு வந்தவர் படிப்படியாக தன்னை உயர்த்தி, வட்டார வழக்குத்தமிழை அடையாளப்படுத்தும் பொருட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பங்கெடுத்ததைத்தொடர்ந்து, பெரிய மேடையை தேர்வு செய்து காத்திருந்தபோது பிக் பாஸ் கிடைத்தது. பிக் பாஸ் மக்கள் மனதை ஜெயிப்பது. நான் உங்களில் ஒருவன்.
18. ஜாக்குலின் (Jacquline):
எனது குரலை பல நிகழ்ச்சிகளில் கேட்டிருப்பீர்கள். பிக் பாஸ் வீட்டில் வரும் 106 நாட்கள் எனது குரலை கேட்கப்போகிறீர்கள். நான் பக்கா கிராமத்துப்பெண். எனது அம்மா எனக்கு அளித்த வாய்ப்புகளை தேடுதலுக்கான உத்வேகமே, என்னை இந்த அளவுக்கு உயர்த்தியுள்ளது. இதுவரை நான் கலாய் வாங்குவதை, கொடுத்ததை மட்டுமே பார்த்திருப்பீர்கள். கொரோனா காலத்தில் பலரின் வாழ்க்கையும் சோகத்தில் தள்ளப்பட்டது. எனது வாழ்க்கையும் மிகவும் கஷ்டத்திற்கு சென்றது. என்னை அடையாளம் கண்ட மக்கள் தொடர்ந்து காதலை தந்தீர்கள். இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடியெடுத்து வைக்கிறேன். நான் யார் என தெரிந்துகொள்ள பிக் பாஸ் உதவும். உங்களின் ஆதரவை வழங்குங்கள். கலக்கப்போவது யார், கோலமாவு கோகிலா என பல படங்கள், தொடர்களில் நடித்தாலும், எனக்கு அது போதவில்லை. மக்களிடம் நெருங்கி பழக வேண்டும் என பிக் பாஸுக்கு வந்துள்ளேன்.