Bigg Boss Tamil Season 8: ஜாக்லினை அதிரடியாக கண்டித்த விஜய் சேதுபதி.. மக்கள் கொடுத்த ஆவேச குரல்.. வெளியேறினார் அர்னவ்?

விதிமுறைகள் அத்துமீறப்பட்ட விவகாரத்தில் ஜாக்குலின் போட்டியாளர்களிடம் கடும் சண்டையிட்ட நிலையில், அவரின் செயல்பாடுகளில் உள்ள தவறை கண்டறிந்து எடுத்துரைத்த விஜய் சேதுபதிக்கு ஆதரவாக மக்கள் கூக்குரலிட்டு ஜாக்குலினின் தவறை உணர்த்தி இருந்தனர்.

Bigg Boss Tamil Season 8: ஜாக்லினை அதிரடியாக கண்டித்த விஜய் சேதுபதி.. மக்கள் கொடுத்த ஆவேச குரல்.. வெளியேறினார் அர்னவ்?
Bigg Boss Tamil Season 8 | Day 13 Promo (Photo Credit: @VijayTelevision Facebook)

அக்டோபர் 20, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): விஜய் தொலைக்காட்சியில் (Vijay TV) ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil), அக்.06 முதல் கோலாகலமான கொண்டாட்டத்துடன் தொடங்கியது. நடப்பு சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் இல்லத்திற்குள் ரவீந்திரன், சாச்சனா நவிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், ஆர்ஜெ ஆனந்தி, சுனிதா, ஜெப்ரி, ரஞ்சித், பவித்ரா, சௌந்தர்யா, அருண் பிரசாத், தர்ஷிகா, விஜே விஷால், அன்ஷிதா, அர்னவ், முத்துக்குமரன், ஜாக்குலின் ஆகியோர் போட்டியாளர்களாக நுழைந்தனர். முதல் நாளே எலிமினேஷனில் வெளியேற்றப்பட்ட சாச்சனா, மீண்டும் 4வது நாளிலேயே உள்ளே வந்தார். முதல் வாரத்தின் முதல் எவிக்ஷனில் ரவீந்தர் வெளியேற்றப்பட்டார். Bigg Boss Tamil Season 8: "கொஞ்சம் அன்பா விசாரிப்போமா?" - இன்றைய மாஸ் சம்பவத்துக்கு தயாரான விஜய் சேதுபதி.. ப்ரோமோ உள்ளே.! 

முத்துகுமரனின் கேம்:

இரண்டாவது வார எலிமினேசன் லிஸ்டில் அர்னவ், தீபக், தர்ஷிகா, ஜெப்ரி, முத்துக்குமரன், ரஞ்சித், சாச்சனா, சவுந்தர்யா, விஷால் ஆகியோர் இடம்பெற்று இருந்தனர். இந்த வாரத்தில் வெள்ளிக்கிழமை நடந்த உணவுக்கான சண்டை தொடர்பாக சாச்சனா, தர்ஷா குப்தாவிடம் நேற்று விஜய் சேதுபதி கருத்துக்களை கேட்டு, தனது ஆலோசனையையும் வழங்கி இருந்தார். அதேபோல, எலிமினேஷன் குறித்து ஆண்கள் குழு முத்துக்குமரன் தலைமையில் விவாதம் செய்தது, போட்டியாளர்களையே முத்துகுமாரனுக்கு எதிர்ப்பு மனநிலையை உருவாக்கி இருக்கிறது. ஏனெனில், அவர் ஆண்கள் குழுவை தனது பகடைக்காய் போல பயன்படுத்தியது நேற்று அம்பலப்படுத்தப்பட்டது.

விஜய் சேதுபதி கண்டிப்பு:

இதனிடையே, இரண்டாவது வாரத்தின் ஞாயிற்றுக்கிழமையன இன்று பிக் பாஸ் வீட்டில் ஒருவர் வெளியேற்றப்படும் நிலையில், அது அர்னவ் என கூறப்படுகிறது. இந்த தகவல் இன்று ஒளிபரப்பு செய்யப்படும் நிகழ்ச்சி முடிந்தததும் உறுதியாகும் எனினும், நம்பத்தகுந்த வட்டாரங்கள் கடந்த வாரம் ரவீந்தரை கைகாண்பித்ததுபோல, இந்த வாரம் அர்னாவை கூறுகிறது. இதனிடையே, போட்டியாளரான ஜாக்குலினிடம் விஜய் சேதுபதி விதிமுறை மீறப்பட்ட விவகாரம் குறித்தும், அதனால் எழுந்த சண்டை குறித்தும் கண்டித்தார். இந்த விஷயத்தில் விஜய் சேதுபதியின் கண்டிப்பை ஏற்றுக்கொண்ட ரசிகர்கள், கைதட்டி, ஆக்ரோஷ குரல் எழுப்பி ஜாக்குலினின் தவறை உணர்த்தியுள்ளார். இன்றைய பிக் (Bigg Boss Tamil Promo Today) பாஸ் ப்ரோமோ வைரலாகி வருகிறது.

ஜாக்குலினை விஜய் சேதுபதி கண்டித்த ப்ரோமோ காட்சிகள்:

(The above story first appeared on LatestLY on Oct 20, 2024 10:14 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).