
அக்டோபர் 27, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): விஜய் தொலைக்காட்சியில் (Vijay TV) கடந்த அக்.06 முதல் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil) ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 20 நாட்களை கடந்து நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வரும் நிலையில், நடப்பு சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் வீட்டிற்குள் ரவீந்திரன், சாச்சனா நவிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், ஆர்ஜெ ஆனந்தி, சுனிதா, ஜெப்ரி, ரஞ்சித், பவித்ரா, சௌந்தர்யா, அருண் பிரசாத், தர்ஷிகா, விஜே விஷால், அன்ஷிதா, அர்னவ், முத்துக்குமரன், ஜாக்குலின் ஆகியோர் போட்டியாளர்களாக இடம்பெற்றனர்.
மூன்றாவது வாரம்:
முதல் நாள் எலிமினேஷனில் வெளியேற்றப்பட்ட சாச்சனா, மீண்டும் 4வது நாளில் வீட்டிற்குள் அனுப்பி வைங்கப்பட்டார். தொடர்ந்து, மூன்றாவது வாரத்திற்கான நாமினேஷன் பட்டியலில் பவித்ரா ஜனனி, அருண் பிரசாத், தர்ஷா குப்தா, முத்துக்குமரன், ஜாக்குலின், சௌந்தர்யா, அன்ஷிதா, சத்யா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த வாரத்தில் நடந்த பிபி டாஸ்க், விஜே விஷாலின் நடனம், காயின் டாஸ்க், பிபி ஹோட்டலில் நடந்த சண்டை ஆகியவை கவனத்தை பெற்றது. அதேவேளையில், பெண்கள் அணி சாச்சனாவை பகடைக்காயாக பயன்படுத்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொண்ட சம்பவம் நடந்தது. அப்பாவி அருண் உதவி செய்யச் சென்று சிக்கிக்கொண்டார். Bigg Boss Tamil Season 8: கவனிச்சிறலாமா? - சரவெடி சம்பவத்துக்கு தயாராகுங்க பிக் பாஸ் ரசிகர்களே.. வெளியானது ப்ரோமோ.!
தர்ஷா குப்தா வெளியேற்றப்படலாம்:
கடந்த முதல் மற்றும் இரண்டாவது வாரத்தில் ரவீந்தர், அர்னவ் ஆகியோர் வெளியேற்றப்பட்ட நிலையில், மூன்றாவது வாரத்தில் தர்ஷா குப்தா வீட்டில் இருந்து வெளியேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை அதற்கான விடை தெரிந்துவிடும். நேற்று சனிக்கிழமை போட்டியாளர்களிடம் வீட்டில் உள்ள பிரச்சனைகள், புகார்கள் குறித்து விஜய் சேதுபதி கேட்டறிந்தார்.
சவுண்டை ஒரேவார்தையால் சாந்திபடுத்தி உட்காரவைத்த சேது:
அதனைத்தொடர்ந்து, இன்று பிக் பாஸ் ஹோட்டல் டாஸ்கின் போது, அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் இருந்து தன்னிலை மறந்து, சுயமாக செயல்பட்டு, தனது பழிவாங்கும் எண்ணத்துடன் அல்லது தனது இயல்பு கோபத்தை வெளிப்படுத்திய நபர்கள் குறித்து விஜய் சேதுபதி காட்டமாக தனது கேள்விகளை முன்வைக்கிறார். இதனால் இன்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர்களை விஜய் சேதுபதி வெளுத்து வாங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ உங்களின் பார்வைக்கு:
#Day21 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 8 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi @mynanduonline #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #BBT #Disneyplushotstartamil #VijayTelevision #VijayTV pic.twitter.com/28Zog5F7jf
— Vijay Television (@vijaytelevision) October 27, 2024