Bigg Boss Tamil Season 8: சாச்சனாவை வச்சி செய்த விஜய் சேதுபதி; அடுத்தடுத்த கேள்விகளால் வறுத்தெடுப்பு.!

ஒற்றுமை தான் பலம் என கூறிவிட்டு, எங்கள் மீதான தவறுகளை வேறு ஒருவரிடம் சென்று சொல்வதை தவிர்த்து, எங்களிடம் சொல்லி இருக்கலாமே என சுனிதா ஆதங்கப்பட்டார்.

Bigg Boss Tamil Season 8: சாச்சனாவை வச்சி செய்த விஜய் சேதுபதி; அடுத்தடுத்த கேள்விகளால் வறுத்தெடுப்பு.!
Sachana & Vijay Sethupathi | Bigg Boss Tamil Season 8 | Day 7 Promo (Photo Credit: @VijayTelevision X)

அக்டோபர் 13, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): விஜய் தொலைக்காட்சியில் (Vijay TV) ஒளிபரப்பாகும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil), கடந்த அக்.06 முதல் கோலாகலமான கொண்டாட்டத்துடன் தொடங்கியது. நடப்பு சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் வீட்டிற்குள் ரவீந்திரன், சாச்சனா நவிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், ஆர்ஜெ ஆனந்தி, சுனிதா, ஜெப்ரி, ரஞ்சித், பவித்ரா, சௌந்தர்யா, அருண் பிரசாத், தர்ஷிகா, விஜே விஷால், அன்ஷிதா, அர்னவ், முத்துக்குமரன், ஜாக்குலின் ஆகியோர் இருக்கின்றனர். முதல் நாளே 24 மணிநேர எலிமினேஷன் பிரிவில் சாச்சனா வெளியேற்றப்பட்டு, பின் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலமாக வீட்டிற்குள் அனுப்பி வைக்கப்பட்டார். Bigg Boss Tamil Season 8: போட்டியாளர்களை கேள்விக்கணைகளால் துளைத்தெடுக்கும் விஜய் சேதுபதி.. பிக் பாசில் இன்னைக்கு ஒரு சம்பவம்.! 

நேற்றைய சம்பவம் சுருக்கமாக:

கடந்த 6 நாட்களாக போட்டிகள் விறுவிறுப்புடன் நடந்த நிலையில், சனிக்கிழமையான நேற்று தொகுப்பாளர் விஜய் சேதுபதி போட்டியாளர்களுடன் கலந்துரையாடினார். அவர்களுக்கு இடையே நடந்த விவாதம் குறித்து பல கருத்துக்களையும் முன்வைத்தார். ஜாக்குலின் மற்றும் தர்ஷா ஆகியோர் விவாதத்தின்போது செயல்படும் முறையை கண்டறிந்து, அதனை தவிர்க்குமாறும் அறிவுறுத்தி இருந்தார். போலியாக பிராங்க் செய்து சர்ச்சையில் சிக்கிய ரவீந்தர், ரஞ்சித் ஆகியோர் கேள்விகளால் வறுக்கப்பட்டனர்.

சாச்சனாவுக்கு டோஸ் விட்ட விஜய் சேதுபதி:

இந்நிலையில், இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில், சாச்சனா (Sachana) பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பெண்கள் அணியிடம் ஒற்றுமை இல்லை. மேலும், ஆஷிதா, சௌந்தர்யா, சுனிதா (Sunita) ஆகிய 3 பேர் பலவீனமான போட்டியாளராக இருப்பதாக ரவீந்தரிடம் (Ravindar) கூறி இருக்கிறார். இந்த விஷயத்தை அவர் சம்பந்தப்பட்ட பெண்களிடம் சொல்லாத நிலையில், அதுகுறித்து விஜய் சேதுபதி (Vijay Sethupathi) கேள்வி எழுப்புகிறார். அப்போது குறுக்கிட்ட சுனிதா, "எனக்கு இது ஆச்சரியமளிக்கும் வகையில் இருக்கிறது. பலம் என்பது நமது யூனிட்டி (ஒற்றுமை) மண்ணாங்கட்டி என கூறிவிட்டு, சாச்சனா ஏன் இப்படி செய்ய வேண்டும். நேரில் சொல்லி இருக்கலாமே, அதிர்ச்சியை தருகிறது" என அவரின் பாணியில் பேசினார்.

கேள்விகளால் சாச்சனாவை வறுக்கும் விஜய் சேதுபதி:

(The above story first appeared on LatestLY on Oct 13, 2024 10:40 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).