டிசம்பர் 18, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வீட்டில் அன்ஷிதா, அருண், தீபக், ஜாக்குலின், ஜெப்ரி, மஞ்சரி, முத்துக்குமரன், பவித்ரா, ராணவ், ரஞ்சித், ராயன், சௌந்தர்யா, விஷால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பிற போட்டியாளர்களான தர்ஷிகா, சத்யா, சாச்சனா, ஆனந்தி, சிவா, வர்ஷினி, ரியா, சுனிதா, தர்ஷிகா, அர்னவ், ரவீந்தர் ஆகியோர் எலிமினேஷன் முறையில் வெளியேறிவிட்டனர். Bigg Boss Raanav: மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட பிக் பாஸ் ராணவ்.. ஜெப்ரி அடித்தாரா? நடந்தது என்ன?!
நாமினேஷன் லிஸ்ட்:
இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் அன்ஷிதா, அருண் பிரசாத், ஜாக்குலின், பவித்ரா ஜனனி, ராயன், சௌந்தர்யா நஞ்சுண்டன், தீபக், மஞ்சரி, முத்துக்குமரன், ராணவ், ரஞ்சித் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். கடந்த வாரமே போட்டியாளர்களின் செயல்பாடுகளில் எல்லை மீறிய காரணத்தால், தொகுப்பாளர் விஜய் சேதுபதி இனி வரும் வாரத்தில் அடிதடி போன்ற செயல்பாடுகள் நடந்தால் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்படுவீர்கள் என எச்சரித்து இருந்தார்.
சர்ச்சை சண்டைகள் - ரெட் கார்டு யாருக்கு?
ஆனால், இந்த வாரம் நடந்த டாஸ்கில் பல்வேறு குழப்பங்கள், சண்டைகள், சௌந்தர்யாவின் மோதல் போக்கு போன்றவை நடைபெற்றுள்ளது. இதனால் கட்டாயம் இந்த வாரத்தில் மிகப்பெரிய சம்பவம் இருக்கிறது என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில், ராணவ், ஜெப்ரி ஆகியோர் இணைந்து விளையாடியபோது, ராணவ் கைகளில் காயம் ஏற்பட்டது. இதனால் இந்த வாரத்தின் இறுதி நாளில் நடக்கப்போகும் நிகழ்வு குறித்து பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சௌந்தர்யா ராணவ் நடிப்பதாக கத்த, இறுதியில் அவர் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டு, சிகிச்சைக்கு பின் பிக் பாஸ் வீட்டிற்கு திரும்பினார்.
பவித்ரா கடிக்கிறா:
இந்நிலையில், இன்று டாஸ்கின் போது பவித்ரா ஜாக்குலினை கடித்ததாக மஞ்சரி அலறிய ப்ரோமோ காட்சிகள் வெளியாகியுள்ளது. போட்டியின்போது போட்டியாளர்களுக்கு இடையே நடந்த காரசாரமான விவாதங்கள் இன்று கவனத்தை பெற்றுள்ளது. இன்று வெளியான ப்ரோமோ காட்சிகள் உங்களின் பார்வைக்கும் இணைக்கப்பட்டுள்ளது.
விஜே விஷால் - ஜாக்குலின் இடையே வாக்குவாதம்:
#Day73 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 8 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi @mynanduonline #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #பிக்பாஸ் #Disneyplushotstartamil #VijayTelevision #VijayTV pic.twitter.com/7HhOhw5Az2
— Vijay Television (@vijaytelevision) December 18, 2024
விறுவிறுப்பு பெரும் தொழிற்சங்க ஆட்டம்:
#Day73 #Promo2 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 8 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi @mynanduonline #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #BBT #BBTamilSeason8 #VijayTelevision #VijayTV pic.twitter.com/IU3EcUgBLW
— Vijay Television (@vijaytelevision) December 18, 2024
பவித்ரா கடிப்பதை மஞ்சரி குற்றச்சாட்டு முன்வைப்பு:
#Day73 #Promo3 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 8 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi @mynanduonline #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #BBT #BBTamilSeason8 #பிக்பாஸ் #VijayTelevision #VijayTV pic.twitter.com/sJSQo3XDVx
— Vijay Television (@vijaytelevision) December 18, 2024