டிசம்பர் 17, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): பிக் பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil Season 8) நிகழ்ச்சி ஆரம்பமாகும் போது, 18 போட்டியாளர்களோடு தொடங்கப்பட்டடு, தற்போது 47 நாட்களை கடந்து ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. முதல் வாரத்தில் ரவீந்தர், இரண்டாவது வாரத்தில் அர்னவ், மூன்றாவது வாரத்தில் தர்ஷா குப்தா, ஐந்தாவது வாரத்தில் சுனிதா, ரியா, வர்ஷினி, ஷிவ குமார், ஆர்.ஜே. ஆனந்தி, சாச்சனா ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். இந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடந்தது, வீட்டிற்குள் இருந்த அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. தர்ஷிகா, சத்யா இருவரும் வீட்டிலிருந்து வெளியேறியுள்ள நிலையில், பிக் பாஸ் வீட்டில் தற்போது அன்ஷிதா, தீபக், ஜாக்குலின், ஜெப்ரி, மஞ்சரி, முத்துக்குமரன், பவித்ரா, ராணவ், ரஞ்சித், ராயன், சௌந்தர்யா, வர்ஷினி, விஷால் ஆகியோர் இருக்கின்றனர்.
இந்த வாரத்தில் பிக் பாஸ் வீட்டில் தலைவராக விஷால் இருந்து வருகின்றார். மேலும், நாமினேஷனில் முத்துக்குமரன், ஜாக்லின், பவித்ரா, அருண், ரஞ்சித், தீபக், மஞ்சரி, சௌந்தர்யா, அன்சிதா, ராணவ், ராயன் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றிருக்கிறது. இந்நிலையில் நேற்று இரவு நடந்த டாஸ்க்கில் ஜெப்ரி மற்றும் ராணவ் இடையே போட்டி கடுமையான நிலையில், ராணவ் கீழே விழ, அவர் தோள்பட்டையில் அடிபட்டுள்ளது. அப்போது அவர் தனக்கு வலிக்கிறது என கத்துகிறார். ஆனால், ஜெப்ரி, சௌந்தர்யா அவன் நடிக்கிறான் என கூறுகிறார்கள். ராணவ்வை அருண் மற்றும் விஷால் இருவரும் தூக்கிக்கொண்டு, கன்பக்ஷன் ரூமுக்கு செல்கிறார்கள். அப்போது கூட, வெளியே இருக்கும் சிலர், ராணவ் நடிக்கிறான் என கூறுகின்றனர். Ilaiyaraaja News: “எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை” - இளையராஜா பேட்டி.!
பின்னர் பிக் பாஸ் அறிவிப்பு ஒன்று வருகிறது. இதில் ராணவ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார் என கூற, அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். ஏற்கனவே பொம்மை டாஸ்க் விளையாடும் போது ராணவ் கழுத்தில் ஜெஃப்ரி முழங்கையை வைத்து இடித்திருந்தார். இதனால் எனக்கு கழுத்து வலிக்கிறது என்று ராணவ் சொல்லி இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் ராணவ் சிகிச்சைக்கு பிறகு மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு திரும்பியுள்ளார். அவர் சில நாட்களுக்கு டாஸ்கில் பங்கேற்க வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இன்றைய நாளின் பிக் பாஸ் ப்ரோமோ வீடியோ: