Bigg Boss Tamil Season 8: குரலை உயர்த்திய அர்னவ்.. "இது எங்களோட வீடு" - கதறியழுத ஜாக்குலின்.. பரபரப்பாகும் பிக் பாஸ் வீடு.!

ஜாக்குலின் - முத்துக்குமரன் இடையே நடந்த வாக்குவாதத்தின் முடிவில் ஜாக்குலின் அழுத்ததால் பிக் பாஸ் வீட்டிற்குள் பரபரப்பு சூழல் உண்டாகியுள்ளது.

Bigg Boss Tamil Season 8: குரலை உயர்த்திய அர்னவ்..
Jacqualine | Arnav | Bigg Boss Tamil Season 8 | Day 9 Promo (Photo Credit: @VijayTelevision X)

அக்டோபர் 15, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): விஜய் தொலைக்காட்சியில் (Vijay TV) ஒளிபரப்பாகும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil), கடந்த அக்.06 முதல் கோலாகலமான கொண்டாட்டத்துடன் தொடங்கியது. நடப்பு சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் வீட்டிற்குள் ரவீந்திரன், சாச்சனா நவிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், ஆர்ஜெ ஆனந்தி, சுனிதா, ஜெப்ரி, ரஞ்சித், பவித்ரா, சௌந்தர்யா, அருண் பிரசாத், தர்ஷிகா, விஜே விஷால், அன்ஷிதா, அர்னவ், முத்துக்குமரன், ஜாக்குலின் ஆகியோர் இருக்கின்றனர். 24 மணிநேர எலிமினேஷன் பிரிவில் சாச்சனா வெளியேற்றப்பட்டு, பின் 4வது நாளில் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலமாக வீட்டிற்குள் அனுப்பி வைக்கப்பட்டார். முதல் வாரத்தில் ரவீந்தர் எலிமினேட் செய்யப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். Oviya Video Leak Controversy: அந்தரங்க வீடியோ லீக்? காவல்துறைக்கு சென்ற நடிகை.. நடிகை 'ஓவியா' பற்றிய லீக் தகவல்கள்.! 

9 வது நாளில் அடுத்தடுத்து கலவரம் செய்த போட்டியாளர்கள்:

இந்நிலையில், ஒன்பதாவது நாளான இன்று முதலில் பிக் பாஸ் கொடுத்த டாஸ்கின்படி போட்டியாளர்கள் வாக்குவாதம் செய்து தங்களுக்கான அணியை வெற்றிபெற வைக்க முயற்சித்து, இறுதியில் பெண்கள் அணியினர் வெற்றியை தழுவி செல்கிறார்கள். ஜாக்குலின் எழுந்ததும் ஆண்கள் பகுதிக்கு வந்தபோது, அர்னவ் இது எங்களின் வீடு, எங்களை கேட்காமல் நீ உள்ளே வராதே என தனது நடிப்பை மறந்து குரலை உயர்த்தி கைகளை நீட்டி கத்தி இருந்தார். அதனைத்தொடர்ந்து, ஒரு சமயத்தில் முத்துக்குமரன் - ஜாக்குலின் இடையே வாக்குவாதம் நடந்தது. கடந்த சில நாட்களாகவே அமைதியாக இருந்த அர்னவ், இன்று தனது குரலை உயர்த்தி இருப்பது கவனம் பெற்றுள்ளது. அதேபோல, ஜாக்குலினின் கண்ணீரும் கவனிக்கப்படுகிறது.

நான்காவது ப்ரோமோ - ஜாக்குலின் தனது அழுகையாக முத்துக்குமாரனிடம் வாக்குவாதம் செய்தல்:

மூன்றாவது ப்ரோமோ - இது எங்களோட வீடு, குரல் உயர்த்திய அர்னவ்:

இரண்டாவது ப்ரோமோ - சமையல் செய்ய, பாத்திரம் கழுவ நடக்கும் சண்டை:

முதல் ப்ரோமோ - மாஸ் காண்பித்த தர்ஷா குப்தா:

(The above story first appeared on LatestLY on Oct 15, 2024 06:43 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).