Oviya Video Leak Controversy: அந்தரங்க வீடியோ லீக்? காவல்துறைக்கு சென்ற நடிகை.. நடிகை 'ஓவியா' பற்றிய லீக் தகவல்கள்.!
திரைப்பட நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான ஓவியா பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை இங்கு பார்க்கலாம்.
அக்டோபர் 15, சென்னை (Cinema News): சற்குணம் இயக்கிய களவாணி படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் ஓவியா. அவர் தமிழில் நடித்த முதல் படமே ஹிட் ஆனதை தொடர்ந்து பல படங்களில் நடித்தார். ஒரு கட்டம் வரை ஹோம்லி கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஓவியா, அதன் பின்னர் கவர்ச்சியில் களமிறங்கினார். படங்களில் நடித்து வந்தாலும் இவருக்கு தொடர் வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் சினிமாவில் இருந்து கொஞ்சம் விலகியே உள்ளார்.
டீப் பேக் வீடியோ: இந்நிலையில், தான் நடிகை ஓவியாவின் அந்தரங்க வீடியோ ஒன்று சமூக வலைத்தளமான எக்ஸ் பக்கத்தில் வெளியானது என நெட்டிசன்கள் பலரும் ட்ரெண்டிங் செய்து வந்தனர். இந்த வீடியோவில் ஓவியா போல உருவ ஒற்றுமை கொண்ட, அடையாளம் இருக்கும் பெண் ஒருவர், ஆண் நண்பருடன் தனிமையில் இருக்கிறார். இதனை வீடியோவை எடுத்து வைத்த நபர்கள், ஓவியாவின் பெயரை கூறி வைரலாக்கி வருகின்றனர் என கூறப்படுகிறது. சிலர் இது டீப் பேக் வீடியோ என கூறி வருகின்றனர். Eric D'Souza Passes Away: நடிகர் ஷாருக்கானின் குழந்தை பருவ வழிகாட்டி.. சகோதரர் எரிக் டிசோசா மறைவு.!
காவல்துறையில் புகார்: இந்த விவகாரத்தில் துணிச்சல் மிகுந்த தமிழ் நடிகைகளில் ஒருவரான ஓவியா, இதனை பெரிதாக எடுத்துக்கொண்டதாக தெரியவில்லை. நடிகை ஓவியாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு சென்ற நபர்களில் சிலர், உங்களின் ஆபாச வீடியோ லீக் ஆகியுள்ளது.... என கொச்சையான முறையில் பல கேள்விகளை எழுப்பி இருக்கின்றனர். இதற்கு பதிலளித்துள்ள நடிகை ஓவியா, அடுத்தமுறை உங்களின் விருப்பத்தை நிறைவேற்றுகிறேன். எனக்கும் லிங்க் அனுப்புங்களேன் என அவர்களின் பாணியிலேயே கலாய்த்து இருக்கிறார். இதுகுறித்து நடிகை ஓவியா கேரள காவல்துறையில் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஓவியா ஆர்மி: பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் மக்கள் இடையே பேமஸ் ஆனதற்கு மிகமுக்கிய காரணம் ஓவியா தான். அவர் செய்யும் குறும்புத்தனங்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டன. அதுமட்டுமின்றி தன்னை எதிர்ப்பவர்களுடன் துணிந்து சண்டையிட்ட ஓவியாவின் குணம் அனைவருக்கும் பிடித்துப் போனதால் ஓவியா ஆர்மி என்ற ஒன்றை உருவாக்கினர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் மிகவும் கவனிக்கத்தகுந்த பிரபலமாக மாறினார். இவரை இன்ஸ்டாகிரமில் மட்டும் கிட்டத்தட்ட 7 லட்சம்பேர் பின் தொடருகின்றனர்.
(The above story first appeared on LatestLY on Oct 15, 2024 01:25 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

