Jacqueline Shocked: ரஞ்சித் Vs ரவீந்தர்.. ஆடிப்போன பிக் பாஸ் வீடு; வாடிப்போன ஜாக்குலின்.. நடந்தது என்ன?.!

வீட்டுக்குள் அதகளம் செய்த போட்டியாளர்களை ஆப் செய்ய, சத்தமே இல்லாமல் பிராங்க் செய்து பயங்கர சண்டையை உண்டாக்கி பின் இருதுருவமும் இணைந்ததால் போட்டியாளர்கள் பரபரப்பிலும், மகிழ்ச்சியிலும் சிக்கித் தவித்துப்போயினர்.

Jacqueline Shocked: ரஞ்சித் Vs ரவீந்தர்.. ஆடிப்போன பிக் பாஸ் வீடு; வாடிப்போன ஜாக்குலின்.. நடந்தது என்ன?.!
Ranjith Vs Ravindar Fight Prank | Bigg Boss Tamil Season 8 (Photo Credit: @@itzSekar X)

அக்டோபர் 10, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil), அக்.06 முதல் கோலாகலமான கொண்டாட்டத்துடன் தொடங்கியது. இந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸ் இல்லத்திற்குள் ரவீந்திரன், சாச்சனா நவிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், ஆர்ஜெ ஆனந்தி, சுனிதா, ஜெப்ரி, ரஞ்சித், பவித்ரா, சௌந்தர்யா, அருண் பிரசாத், தர்ஷிகா, விஜே விஷால், அன்ஷிதா, அர்னவ், முத்துக்குமரன், ஜாக்குலின் ஆகியோர் போட்டியாளர்களாக நுழைந்தனர். முதல் போட்டியாளராக சாச்சனா 24 மணிநேரத்தில் எலிமினேஷன் செய்யப்பட்டு வெளியே அனுப்பப்பட்டார். இந்த வாரத்தின் தலைவராக தர்ஷிகா தேர்வு செய்யப்பட்டுள்ளார். போட்டி விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. TP Madhavan Passes Away: பிரபல மலையாள நடிகர் டிபி மாதவன் திடீர் மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி.! 

ரஞ்சித் - ரவீந்தர் சண்டை:

இந்நிலையில், மூன்றாவது நாளான நேற்று வீட்டில் இருக்கும் அனைவரும் கார்டனிங் பகுதியில் இருந்தபோது வாக்குவாதம் உண்டானது. இதனால் ரஞ்சித் மற்றும் ரவீந்தர் ஆகியோர் மிகப்பெரிய சண்டையில் எடுப்பட்டதுபோன்ற காட்சிகள் ப்ரமோவாக வெளியாகி வைரலாகி இருந்தன. இதனால் இன்று பெரிய சம்பவம் காத்திருக்கிறது என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தபோது, அவர்களுக்கு நேரடி ஒளிபரப்பில் ஏமாற்றம் மிஞ்சியது.

ஏமாற்றமடைந்த ஜாக்குலின்:

வீட்டின் போட்டியாளர்களுக்கு இடையே நிலவிய பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர இருவரும் முன்னதாகவே பேசி வைத்துக்கொண்டு சண்டையிடுவது போல நடித்துள்ளனர். இருவரின் சண்டையால் வீடு அதகாலமாகி, பலரும் தங்களின் பிரச்சனையை மறந்து இருவரையும் சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கி இருந்தனர். உண்மையை அறியாத சுனிதா "என்னடா நடக்குது இங்கே.. எனக்கு ஒண்ணுமே புரியலை" என்பதை போல முகபாவனையை வெளிப்படுத்தி இருந்தார். அதேவேளையில், ஜாக்குலினுக்கு ஆத்திரம் ஏற்பட்டு அவர் முகமே வாடிப்போனது. இந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.

பிராங்க் நிகழ்வை அம்பலப்படுத்தி ரஞ்சித் - ரவீந்தர் மாறிமாறி சிரித்துக்கொண்ட காட்சிகள்:

(The above story first appeared on LatestLY on Oct 10, 2024 01:10 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).