அக்டோபர் 09, சென்னை (Cinema News): 1980 முதல் 90 காலகட்டங்கள் வரை மலையாள திரையுலகில் 600க்கும் மேற்பட்ட பல திரைப்படங்களில் நடித்தவர்தான் டிபி மாதவன் (TP Madhavan). 1960களில் ஆங்கில பத்திரிகைகளில் வேலை பார்த்த இவர் தன்னுடைய 40 வயதில் தான் சினிமாவில் கால் எடுத்து வைக்கிறார். 1975 ஆம் ஆண்டு வெளிவந்த ராகம் என்னும் மலையாள படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகம் ஆனார். ஆரம்பத்தில் வில்லன் வேடங்களில் நடித்த இவர் பின்னர் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். மலையாளத் திரையுலகின் நடிகர் சங்க அமைப்பான அம்மாவின் (AMMA) முதல் பொதுச் செயலாளர் இவர் தான். இவரது பதவி காலத்தில் பல்வேறு நல திட்டங்களினை கொண்டு வந்தார். Moana 2 Trailer: சுமார் 8 ஆண்டுகள் கழித்து வரப்போகும் பிரமாண்ட அனிமேஷன் திரைப்படம்.. மோனா 2 படத்தின் ட்ரைலர் வெளியீடு..!
சினிமாவில் வாய்ப்பு குறைய தொடங்கும் பொழுது தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க வந்தார். ஆனால் இவருக்கு திடீரென ஞாபக மறதி நோய் ஏற்பட்டது. இதனால் 2015 ஆம் ஆண்டு முதல் தனியே வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தீராத வயிற்று வலியினால் மாதவன் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் 88 வயதில் தனி அறையில் இருக்கும் பொழுது இயற்கை எய்தி உள்ளார். இவரது இறப்பு திரையுலகத்தையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.