Bigg Boss Tamil Season 9: பிக் பாஸ் தமிழ் சீசன் 9.. வெளியான வீடியோ... அப்டேட் உள்ளே.!

விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 (Bigg Boss Tamil Season 9) அப்டேட் வீடியோ வெளியாகியுள்ளது. தொகுப்பாளராக விஜய் சேதுபதி பணியாற்றுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Bigg Boss Tamil Season 9: பிக் பாஸ் தமிழ் சீசன் 9.. வெளியான வீடியோ... அப்டேட் உள்ளே.!
Bigg Boss Tamil Season 9 | பிக் பாஸ் தமிழ் சீசன் 9 (Photo Credit: YouTube)

செப்டம்பர் 01, ஈவிபி பிலிம் சிட்டி (Television News): விஜய் தொலைக்காட்சியில் கடந்த 8 ஆண்டுகளாக ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் தமிழ் (Bigg Boss Tamil) நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. முதல் 7 சீசன்களை நடிகர் கமல்ஹாசன் (Bigg Boss Host Kamal Haasan) தொகுத்து வழங்கிய நிலையில், 8வது சீசனை நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi Hosts Bigg Boss Tamil) தொகுத்து வழங்கினார். விஜய் சேதுபதியின் மாறுபட்ட வர்ணனை பார்வையாளர்களை கவர்ந்தது. Bigg Boss Tamil Season 9: ரெடியா மக்களே! விஜய் டிவி-யின் பிக் பாஸ் தமிழ் சீசன் 9.. தொகுப்பாளர் இவர்தான்..! 

பிக் பாஸ் சீசன் 9 அறிவிப்பு (Bigg Boss Season 9 Tamil Latest Announcement):

செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் இருந்து பிக் பாஸ் 9 சீசன் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பிக் பாஸ் தமிழ் சீசன் 9ன் முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. வீடியோவில் இடம்பெற்ற காட்சிகளின் அடிப்படையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதியே மீண்டும் தொகுத்து வழங்குகிறார். மேலும், 9வது பிக் பாஸ் சீசனுக்காக புதிய லோகோ (Bigg Boss Tamil 9 Logo) உருவாக்கப்பட்டுள்ளது. அதனையும் விஜய் டிவி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. ப்ரோமோ வீடியோவும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 அப்டேட் (Bigg Boss Tamil Season 9 Update):

(The above story first appeared on LatestLY on Sep 01, 2025 07:26 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).