பிக் பாஸ் தமிழ் / Bigg Boss Tamil Season 9 (Photo Credit: YouTube / @BBTrolee X)

ஆகஸ்ட் 18, ஈவிபி பிலிம் சிட்டி (Television News): விஜய் தொலைக்காட்சியில் கடந்த 8 ஆண்டுகளாக ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் தமிழ் (Bigg Boss Tamil) நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. முதல் 7 சீசன்களை நடிகர் கமல் ஹாசன் (Bigg Boss Host Kamal Haasan) தொகுத்து வழங்கிய நிலையில், 8வது சீசனை நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi Hosts Bigg Boss Tamil) தொகுத்து வழங்கி இருந்தார். கமலை போல இல்லாமல், விஜய் சேதுபதியின் மாறுபட்ட வருணனை பார்வையாளர்களை கவர்ந்து இருந்தது. Coolie Box Office: "எட்ரா கொக்கிய" - அமெரிக்காவில் சம்பவம் செய்த 'கூலி'.. முதல் நாள் வசூல் விபரம்.! 

பிக் பாஸ் சீசன் 9 அறிவிப்பு (Bigg Boss Season 9 Tamil Announcement):

இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 9 குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, அக்டோபர் மாதத்தில் இருந்து பிக் பாஸ் 9 சீசன் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை மீண்டும் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கலாம் என சொல்லப்படுகிறது. அவரை மாற்றும் முயற்சி குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. கடந்த 8 சீசன்களிலும் விஜய் டிவி நிர்வாகம் ஒவ்வொரு முறையும் புதிய போட்டிகளை கொண்டு வந்து போட்டியாளர்களை மக்களுக்கு அடையாளப்படுத்தி இருந்தது. வீட்டின் கட்டுமான அமைப்பும் ஒவ்வொரு முறையும் புதுப்பிக்கப்பட்டது. 9வது சீசனை பொறுத்தவரையில் எந்த மாதிரியான புதிய அம்சங்கள் இடம்பெறப்போகிறது? என்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Bigg Boss Tamil Season 8 | Grand Finale (Photo Credit: @gurunaatha1 X)
Bigg Boss Tamil Season 8 | Grand Finale Clicks (Photo Credit: @gurunaatha1 X)

பிக் பாஸ் சீசன் & வெற்றியாளர்கள் (Bigg Boss Tamil Winners List Tamil):

  • பிக் பாஸ் சீசன் 1 - ஆரவ் நபீஸ்
  • பிக் பாஸ் சீசன் 2 - ரித்விகா
  • பிக் பாஸ் சீசன் 3 - முகேன் ராவ்
  • பிக் பாஸ் சீசன் 4 - ஆரிஅர்ஜுனன்
  • பிக் பாஸ் சீசன் 5 - ராஜூ ஜெயமோகன்
  • பிக் பாஸ் சீசன் 6 - முகமது அசீம்
  • பிக் பாஸ் சீசன் 7 - அர்ச்சனா ரவிச்சந்திரன்
  • பிக் பாஸ் சீசன் 8 - முத்துக்குமரன் ஜெகதீசன்
  • பிக் பாஸ் சீசன் 9 - காத்திருப்போம்!

விதிமுறை என்ன?

* 18 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைக்கப்படுவார்கள்

* வீடு, உறவினர்களுடன் தொடர்பின்றி கொடுக்கப்படும் போட்டிகளை திறம்பட விளையாட வேண்டும்

* மக்களின் செல்வாக்கு பெரும் இறுதி போட்டியாளர் வெற்றியாளராக தேர்வு செய்யப்படுவார்

* ஒவ்வொரு வாரமும் மக்களின் வாக்கு குறைந்தவரை எவிக்சன் செய்து வெளியேற்றம் விதிமுறை உண்டு

* 106 நாட்கள் இல்லத்தில் இருந்து, போட்டிகளை திறம்பட விளையாடி, மக்களின் சிறப்பான கவனத்தை ஈர்த்தவர் வெற்றியாளராக இருப்பார்

* வெற்றியாளருக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும்

* பிக் பாஸ் தமிழ் சீசனில் 4வது சீசன் அதிக பார்வையாளர்களை ஈர்த்தது. 6, 7ல் ஏற்பட்ட சரிவை 8வது சீசன் தாக்குபிடித்துள்ளது.