Bigg Boss Tamil Season 9: பிக் பாஸ் 9 எப்போது?.. தேதி குறிச்சு வச்சிக்கோங்க.. அசத்தல் அப்டேட் கொடுத்த விஜய் டிவி.!

விஜய் தொலைக்காட்சியில் (Vijay Television) மிகப்பிரபலமாக ஒளிபரப்பு செய்யப்படும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 (Bigg Boss Season 9) குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் செய்திகளை தொடர்ந்து லேட்டஸ்ட்லி தமிழ் பக்கத்தில் உடனுக்குடன் பெறுங்கள்.

Bigg Boss Tamil Season 9: பிக் பாஸ் 9 எப்போது?.. தேதி குறிச்சு வச்சிக்கோங்க.. அசத்தல் அப்டேட் கொடுத்த விஜய் டிவி.!
Bigg Boss Tamil Season 9 (Photo Credit : @vijaytelevision X)

செப்டம்பர் 14, ஈவிபி பிலிம் சிட்டி (Television News): விஜய் தொலைக்காட்சியில் கடந்த 8 ஆண்டுகளாக ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் தமிழ் (Bigg Boss Tamil) நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. முதல் 7 சீசன்களை நடிகர் கமல்ஹாசன் (Bigg Boss Host Kamal Haasan) தொகுத்து வழங்கிய நிலையில், 8வது சீசனை நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi Hosts Bigg Boss Tamil) தொகுத்து வழங்கினார். விஜய் சேதுபதியின் மாறுபட்ட வர்ணனை பார்வையாளர்களை கவர்ந்தது. செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் இருந்து பிக் பாஸ் 9 சீசன் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இதனை முன்னிட்டு கடந்த 01ம் தேதி பிக் பாஸ் தமிழ் முதல் ப்ரோமோ வெளியானது. அதன்படி, விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது உறுதி செய்யப்பட்டது.

பிக்பாஸ் சீசன் 9 எப்போது?

9வது பிக் பாஸ் சீசனுக்காக புதிய லோகோவும் (Bigg Boss Tamil 9 Logo) உருவாக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் ப்ரோமோ ஒன்றையும் விஜய் தொலைக்காட்சி வெளியிட்டது. அதன்படி உங்களுக்கு தெரியல., எனக்கு புரியல என்று நடிகர் விஜய் சேதுபதி அடுக்கடுக்காக பல்வேறு கேள்விகளை கேட்டு வந்தார். கடைசியாக பிக் பாஸ் நிகழ்ச்சியை பாக்க பாக்க தான் புரியும்.. போக போக தான் தெரியும் என்றும், பிக் பாஸ் சீசன் 9 வித்தியாசமாக இருக்கும் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த பிக் பாஸ் 9 நிகழ்ச்சி வரும் அக்டோபர் 5-ஆம் தேதி முதல் (Bigg Boss Season 9 Date) தொடங்க இருப்பதாக அறிவிப்பினை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. மேலும் போட்டியாளர்களாக கீழ்காணும் நபர்கள் பங்கேற்க உள்ளதாகவும் இணையத்தில் தகவல்கள் கசிந்துள்ளன. Bigg Boss Tamil Season 9: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 விரைவில் தொடக்கம்.. போட்டியாளர்கள் யார்? எகிறும் எதிர்பார்ப்புகள்.! 

பிக் பாஸ் போட்டியாளர்கள் உத்தேச பட்டியல் (Bigg Boss Tamil Season 9 Predicted Contestants List):

1) பரீனா ஆசாத்

2) நேகா (பாக்கியலட்சுமி சீரியல் இனியா)

3) கூமாபட்டி தங்கபாண்டி

4) சிவரஞ்சனி (தீபக்கின் மனைவி)

5) சிந்தியா வினொலின் (இன்ஸ்ட்டா பிரபலம்)

6) உமைர் இப்ன் லத்தீபி (குக் வித் கோமாளி)

7) விஜே பார்வதி

8) அக்ஷிதா அசோக் (பாக்கியலட்சுமி சீரியல் 2வது அமிர்தா கதாபாத்திரம்)

9) ஷபானா (ஜீ தமிழ் செம்பருத்தி சீரியல் நடிகை)

10) நேகா ராஜேஷ் மேனன் (நடிகை & மாடல்)

11) அமிர்தா சீனிவாசன் (வெப் சீரிஸ் நடிகை)

12) பாலு சரவணன் (நடிகர்)

13) சதிஷ் கிருஷ்ணன் (கோரியோகிராபர்)

14) புவியரசு (சீரியல் நடிகர்)

15) வினோத் பாபு (ரியாலிட்டி ஷோ நடிகர்)

16) மரியன் (தொகுப்பாளர்)

பிக் பாஸ் சீசன் & வெற்றியாளர்கள் (Bigg Boss Tamil Winners List Tamil):

  • பிக் பாஸ் சீசன் 1 - ஆரவ் நபீஸ்
  • பிக் பாஸ் சீசன் 2 - ரித்விகா
  • பிக் பாஸ் சீசன் 3 - முகேன் ராவ்
  • பிக் பாஸ் சீசன் 4 - ஆரிஅர்ஜுனன்
  • பிக் பாஸ் சீசன் 5 - ராஜூ ஜெயமோகன்
  • பிக் பாஸ் சீசன் 6 - முகமது அசீம்
  • பிக் பாஸ் சீசன் 7 - அர்ச்சனா ரவிச்சந்திரன்
  • பிக் பாஸ் சீசன் 8 - முத்துக்குமரன் ஜெகதீசன்
  • பிக் பாஸ் சீசன் 9 - காத்திருப்போம்!

பிக் பாஸ் தொடக்கம் குறித்த அசத்தல் அப்டேட் :

(The above story first appeared on LatestLY on Sep 14, 2025 11:56 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).