செப்டம்பர் 11, ஈவிபி பிலிம் சிட்டி (Television News): விஜய் தொலைக்காட்சியில் கடந்த 8 ஆண்டுகளாக ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் தமிழ் (Bigg Boss Tamil) நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. முதல் 7 சீசன்களை நடிகர் கமல்ஹாசன் (Bigg Boss Host Kamal Haasan) தொகுத்து வழங்கிய நிலையில், 8வது சீசனை நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi Hosts Bigg Boss Tamil) தொகுத்து வழங்கினார். விஜய் சேதுபதியின் மாறுபட்ட வர்ணனை பார்வையாளர்களை கவர்ந்தது. செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் இருந்து பிக் பாஸ் 9 சீசன் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு கடந்த 01ம் தேதி பிக் பாஸ் தமிழ் முதல் ப்ரோமோ வெளியானது. அதன்படி, விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது உறுதி செய்யப்பட்டது. Kantara Chapter 1: காந்தாரா சாப்டர் 1 எப்போது வெளியாகும்?.. 30 நாடுகளில் மாபெரும் ரிலீஸ்.!
பிக் பாஸ் போட்டியாளர்கள் உத்தேச பட்டியல் (Bigg Boss Tamil Season 9 Predicted Contestants List):
1) பரீனா ஆசாத்
2) நேகா (பாக்கியலட்சுமி சீரியல் இனியா)
3) கூமாபட்டி தங்கபாண்டி
4) சிவரஞ்சனி (தீபக்கின் மனைவி)
5) சிந்தியா வினொலின் (இன்ஸ்ட்டா பிரபலம்)
6) உமைர் இப்ன் லத்தீபி (குக் வித் கோமாளி)
7) விஜே பார்வதி
8) அக்ஷிதா அசோக் (பாக்கியலட்சுமி சீரியல் 2வது அமிர்தா கதாபாத்திரம்)
9) ஷபானா (ஜீ தமிழ் செம்பருத்தி சீரியல் நடிகை)
10) நேகா ராஜேஷ் மேனன் (நடிகை & மாடல்)
11) அமிர்தா சீனிவாசன் (வெப் சீரிஸ் நடிகை)
12) பாலு சரவணன் (நடிகர்)
13) சதிஷ் கிருஷ்ணன் (கோரியோகிராபர்)
14) புவியரசு (சீரியல் நடிகர்)
15) வினோத் பாபு (ரியாலிட்டி ஷோ நடிகர்)
16) மரியன் (தொகுப்பாளர்)