Arthi Mittal Sex Rocket: ஒரு பெண்ணுக்கு ரூ.60 ஆயிரம்; பாலிவுட்டை பதறவைத்த நடிகையின் விபச்சாரம்.. பரபரப்பு தகவல் அம்பலம்.!
பெண்களை மூளைச்சலவை செய்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த நடிகை கைது செய்யப்பட்ட நிலையில், அதிகாரிகள் வாடிக்கையாளர்களை போல செய்த சோதனையில் பகீர் தகவலும் அம்பலமானது.
ஏப்ரல் 18, மும்பை (Cinema News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையை சேர்ந்த நடிகை ஆர்த்தி மிட்டல் (Aarti Mittal). இவர் நடிகராகவும், திரைத்துறைக்கு புதிய நடிகைகளை அறிமுகம் செய்யும் நபராகவும் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், இவர் திரைத்துறையில் அடியெடுத்து வைக்க விரும்பும் பெண்களை மூளைச்சலவை செய்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது அம்பலமானது. இந்த விவகாரம் தொடர்பாக பெண்களும் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில் Sex Rocket எனப்படும் பாலியல் தொழிலில் பெண்களை திட்டமிட்டு ஈடுபடுத்தியதும், வாடிக்கையாளர்களுக்கு இவர்களே நேரடியாக பெண்களை தொடர்புபடுத்தி வைத்ததும், பெண்களை பாலியல் அடிமைகளாக விற்பனை செய்ததும் அம்பலமானது. Ileana Pregnant: கர்ப்பமாக இருக்கும் தகவலை சொல்லி, ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய நடிகை இலியானா..!
இதனையடுத்து நடிகர் ஆர்த்தி மிட்டல் உட்பட பலரை கைது செய்த அதிகாரிகள், அவரிடம் பாலியல் தொழிலாளியாக பணியாற்றி வந்த 2 பெண்களை மீட்டு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் பாலிவுட் திரைஉலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நபர் ஒருவருக்கு ரூ.60 ஆயிரம் வீதம் பணம் வாங்கிக்கொண்டு பாலியல் தொழில் நடைபெற்றுள்ளது.
(The above story first appeared on LatestLY on Apr 18, 2023 02:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

