Indian 2 Audio Launch: இந்தியன் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா.. எங்கு? எப்போது? விபரம் உள்ளே..!

இந்தியன் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மறுநாள் நடைபெறவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Indian 2 Audio Launch: இந்தியன் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா.. எங்கு? எப்போது? விபரம் உள்ளே..!
Indian 2 Audio Launch (Photo Credit: @LycaProductions x)

மே 31, சென்னை (Cinema News): ஆண்டவர் என்றழைக்கப்படும் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996-ம் ஆண்டு வெளியான படம் இந்தியன் (Indian). கமல் 2 வேடங்களில் நடித்த இந்த படத்தில் சுகன்யா, மனிஷா கொய்ராலா, செந்தில் கவுண்டமணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்நிலையில் பல ஆண்டுகள் கழித்து அந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை தற்பொழுது எடுத்து முடித்திருக்கிறார் இயக்குனர் சங்கர். இந்த இந்தியன் 2 (Indian 2) திரைப்படம் வருகின்ற ஜூலை மாதம் 12ஆம் தேதி உலக அளவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் 2: இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லைகா மற்றும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதனிடையே இந்தியன் 2 படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான பாரா (First Single Paaraa) பாடல் வெளியானது. இதில் வீடியோவில் கமல்ஹாசன் குதிரையில் வளரி கத்தியை எடுத்துக்கொண்டு வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்றன. தொடர்ந்து இப்படத்தின் இரண்டாவது பாடலான ‘நீலோற்பலம்’ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. Health Of Sick Elephant: தாய் யானைக்கு அடி.. பிளறிய குட்டி யானை.. வனத்துறையினர் காப்பாற்ற தீவிர முயற்சி..!

இசை வெளியீட்டு விழா: இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா (Audio Launch) வரும் ஜூன் 1-ம் தேதி, சென்னை நேரு ஸ்டேடியத்தில் மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இது குறித்த போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.

(The above story first appeared on LatestLY on May 31, 2024 06:39 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).