மே 31, கோயம்புத்தூர் (Coimbatore News): கோவை மருதமலை அடிவாரத்துக்கு உட்பட்ட பகுதியில் பெண் யானை ஒன்று உடல்நல குறைவால் மயங்கிய நிலையில் கிடந்துள்ளது. தொடர்ந்து அந்த யானையின் குட்டியானை சத்தமிட்டு கொண்டே இருந்துள்ளது. அப்போது அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்ட வனத்துறையினர் யானையின் நிலையை கண்டறிந்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் யானைக்கு சிகிச்சை அளிக்க தொடங்கினர். Car-Borne Thieves Steal Goats in Daylight: ஆட்டுக்குட்டியை காரில் வந்து அலேக்கா கடத்திட்டு போன நபர்கள்.. பாகிஸ்தானில் பரபரப்பு..!
யானைக்கு நேற்று முழுவதும் குளுக்கோஸ் நீர் சத்து நிறைந்த உணவுகள் மருந்துகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து இன்றும் அந்த சிகிச்சை நடைபெற்றது. யானைக்கு ஓரளவிற்கு உடல்நிலை தேறிய நிலையில் யானையை கிரைன் உதவியுடன் தூக்கி நிறுத்திய வனத்துறையினர் யானையின் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் அந்த குட்டி யானையை தாய் யானையிடம் விட்டவுடன் அந்த குட்டி யானை பால் குடித்ததை தொடர்ந்து பெண் யானை உடல் நிலை தேறி காணப்பட்டது. இருப்பினும் நடக்க முடியாமல் இருந்ததால் அந்த பெண் யானைக்கு உணவளிக்க வனத்துறையினர் முயற்சித்து வருகின்றனர்.
கோவை மருதமலை வனப்பகுதியில் நேற்று மயங்கிய நிலையில் கண்டறியப்பட்ட, பெண் காட்டு யானைக்கு தொடர் சிகிச்சை.#TamilNews pic.twitter.com/ldEY5H4jIA
— Backiya (@backiya28) May 31, 2024